.

Pages

Tuesday, January 10, 2012

கொத்தனார் கூலியும்....! வெள்ளிக்கிழமையும்....! !


சகோதரர்களே ! நாம் அனைவரும் இரவு பகல் என பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தில் நல்லதொரு செயல் திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவது என்பது நிதர்சனமான உண்மை. அதில் குறிப்பாக வீடு கட்டுதல் என்பது ஒரு கடமையாகவோ, கனவாகவோ நாம் அனைவருக்கும் இருக்கும்.


நமதூரில் சராசரியாக ஒரு நாளைக்கு 500 நபர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபடுகிறார்கள். வீடு கட்டும் பலரும் சந்திக்கிற நெருக்கடி என்னவென்றால் கட்டுமானப் பணியாளர்களின் ஊதியம்.

நமதூரில் கட்டுமான பணியாளர்கள் கீழ்கண்ட கூலிகளை ஊதியமாக பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.............

மேஸ்திரிக்கு……………............... ரூ.600
கொத்தனாருக்கு.........................ரூ 550
மம்பட்டி – ஆள்...........................ரூ 400
சித்தாள்........................................ரூ 200
இதனால் ஒரு வீடு உருவாவதில் கட்டுமானப் பொருட்களின் விலைக்கு நிகராக தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதன் மூலம் செலவாகிறது.

இதைப்பற்றி நமதூரைச்சேர்ந்த சில பொதுமக்களிடம் விசாரித்த வகையில்...

“முன்பெல்லாம் காலையில் 8 மணிக்கு பணி தொடங்கி மாலை 6 மணி வரையில் வேலை செய்வார்கள். மதியம் சாப்பாடு அவர்களே எடுத்து வருவார்கள். வீடு கட்டுபவர்கள் சார்பில் இரு வேலை தேனீர் ( டீ ) மட்டும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் காலை 9 to 9.30 மணிக்கு மேல் வேலைக்கு வந்து மதியம் சிறிய தூக்கத்துடன் மாலை 4 to 4.30 மணிக்கெல்லாம் முடித்து விடுகின்றனர். மதியம் சாப்பாடு வாங்கி தரவேண்டும் என வேண்டுக்கோளும் விடுக்கின்றனர்.

இதற்கிடையில் அவர்கள் வேலை செய்யும் பொழுது பேசுகின்ற பேச்சு இருக்கிறதே...............அப்பப்பா ! நீங்கள் ப்ளாக்கில் எழுதுவதற்கு இடம் போதாது ! இதனால் வேலை செய்யக்கூடிய நேரங்கள் வீண் விரயமாகிறது. மேலும் செங்கல், ஜல்லி, மணல், டைல்ஸ்-மார்பில்ஸ், போன்றவைகளை வீடு கட்டுபவர்களுக்கு வாங்கி கொடுப்பதன் மூலம் “ ஊக்கத்தொகையும் “ விற்பனையாளர்களிடமிருந்து பெற்று விடுகிறார்கள். மேலும் கம்பி கட்டுபவர் மற்றும் செண்ட்ரிங் பலகை அடிப்பவர்களை ஏற்பாடு செய்வதன் மூலம், ஆசாரிகளை அறிமுகப்படுத்துதல், டைல்ஸ் ஓட்டும் நபர் என்று இவர்களால் அறிமுகப்படுத்தும் பல நபர்களிடம் இருந்தும் “ ஊக்கத்தொகையும் “ பெற்று விடுகிறார்கள். “
என்று பொதுமக்களின் கருத்துக்களாக உள்ளது.

இதில் நாமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறோம். கட்டுமான வேலைகள் குறிப்பிட்ட நாளில் முடிய வேண்டும் என்று அவர்களுக்கு நெருக்குதலைக் கொடுத்து கூடுதலாக பணத்தை கொடுத்து அவர்கள் சம்பளத்தை உயர்த்த ஒரு வழி வகுத்து கொடுக்கிறோம். குறிப்பாக அவர்களிடமிருந்து குறிப்பிட்ட சிறிய கட்டுமான வேலைகளைப் பெற இத்தவறுகள் அதிகமாக நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் :நமதூரில் வெள்ளிக்கிழமை என்பது ஒவ்வொரு சகோதரருக்கும் ஜும்மா பெருநாளாக இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை தடுக்கும் விதத்தில் “வெள்ளிக்கிழமையை” விடுமுறை தினமாக அனைத்து சகோதரர்களும் பின்பற்றி அன்றைய தினத்தில் யாரும் பணியாட்களை நியமிக்க வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும்.

இவ்விடுமுறை தினம் கட்டுமான தொழிலில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களாகிய கொத்தன்னார்கள், கார்ப்பெண்டர்கள், பெயிண்டர்கள், ஏலெக்ட்ரிசியன்கள், ப்ளம்பர்கள், டைல்ஸ் ஓட்டுபவர் என வீட்டில் இருந்து பணிபுரியக்கூடிய அனைத்து தொழிலாளிகளும் கடை பிடிக்க வலியுறுத்த வேண்டும்.

மேலும் வெள்ளிக்கிழமைகளில் பழைய வீடுகளை இடிப்பது, அதைப் அப்புறப்படுத்துவது போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.

தீர்வுதான் என்ன ?
1. கட்டுமான பணியாளர்களின் சம்பளம் நிர்ணயம் செய்தல் மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் போன்றவைகள் சம்பந்தமாக “கட்டுமான பணியாளர்கள் சங்கத்தை” தொடர்பு கொண்டு ஆலோசனை செய்து ஓர் இறுதி முடிவை எடுக்கலாம்.


2. நமதூரைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் கட்டுமான பணியாளர்களுக்காக வழங்கி வருகிற கூலியை கேட்டறிந்து அதன் பிரகாரம் நிர்ணயம் செய்து அவர்களுக்கு வழங்கலாம்.


3. நமதூரில் கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அடைக்க கேட்டுக்கொள்ளலாம்.


4. இவ்விசயத்தில் நமதூரைச் சேர்ந்த அனைத்து முஹல்லாவில் உள்ள சகோதரர்களும் ஒன்றுனைந்து ஒரு கட்டுப்பாடு, ஒழுங்கு முறையை பின்பற்றலாம்.


5. மேலும் நமதூரைச்சேர்ந்த கட்டுமான ஒப்பந்த தொழிலில் ஈடுபடும் சகோதரர்களின் ஆலோசனைகளைப் பெற்று, ஒரு ஒழுங்கு முறையை பின்பற்ற வலியுறுத்தலாம்.

இதில் அனைத்து தரப்பினரிடம் இருந்து நல்ல ஒரு ஒத்துழைப்புடன் கூடிய கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றினால் நிச்சயம் ஓர் சிறிய மாற்றத்தை நமதூரில் கொண்டு வரலாம் ( இன்ஷா அல்லாஹ் ! )

இறைவன் நாடினால் ! தொடரும்.....................

1 comments:

  1. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers