.

Pages

Thursday, January 12, 2012

மேலத்தெருவும் அதன் சிறப்புகளும் !

அதிரையில் உள்ள குறிப்பிடத்தக்க பெரிய தெருக்களில் மேலத்தெருவும் ஓன்று ஏறக்குறைய பத்தாயிரம் நபர்கள் வாழக்கூடிய தெருக்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.......இதன் பரப்பளவில் பெரிய விரிவாக்கத்துடன் கூடிய சானா வயல், சவுக்கு கொல்லை, மொந்தன் கொல்லை, கொசுவான்ங் கொல்லை, ரசூல் நகர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு மக்கள்கள் குடிபெயர்ந்து வருகிறார்கள்.


இத்தெருவில் பெரிய குடும்பங்களாக அதாவது “ M.M.S , அண்ணாவியார், K.S.M, N.M.S ( சூனா ), P.M.K, சேக்கனா, V.T , கண்டசால, வாத்தி, சர்க்கரை, பெரிய மின்னார், சிறிய மின்னார், மூனா மூனா, சேனா மூனா, ஆனா மூனா, காவண்ணா, ஆனா கான, எம். எச், கர்ணா (கருணை ), சானா பானா, காவன்னா நெனா, A.K.S, N.K.S, M.A.C, A.S.M , M.R.P , ஊமினா “ போன்ற செல்லமான பெயர்களில் அழைக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.( விடுபட்ட குடும்பங்களின் பெயர்களை கருத்து பகுதியில் தெரிவித்தால், இக்கட்டுரையில் இணைக்கப்படும் )


இப்பகுதிகளில் பிரபல தொழில் அதிபர்கள் வசிக்கக்கூடியவர்களாவும், அவர்களின் தொழிலாக விவசாயம் ( தென்னை, நெல் ) , தேங்காய் வணிகம், வியாபாரங்கள், சிறு விவசாய தொழிற் கூடங்கள், REAL ESTATE, SUPER MARKET கள், போக்குவரத்து வாகனங்கள், மளிகை கடைகள், ஹோட்டல்கள், பேன்சி கடைகள் என்றும் ஏழை எளியோர்களால் நடத்தக்கூடிய சிறிய தொழில்களான டீ கடை, பெட்டிக்கடை, சலூன்கள், சர்பத்-மோர் கடை, இட்லி-தோசை-இடியாப்பம் கடைகள் போன்றவைகளும் தொழிலாக உள்ளன.

குறிப்பாக வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கக்கூடியவர்கள் தொழில் செய்யக்கூடியவர்களாகவும், பணிபுரியக்கூடியவர்களாவும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மேலும் இப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பெரும்பாலான பெண்கள் தங்களது வீட்டு பொறுப்புகளையும், தங்கள் பிள்ளைகளை பராமரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.


இப்பகுதியை சார்ந்தவர்கள் ஆலிம்கள், ஆலிமாக்கள், சுதந்திர போராட்ட தியாகி, சமூக ஆர்வலர்கள், பிரபல அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவைகளின் நிர்வாகிகளாகவும், டாக்டர், அட்வகேட், அரசு ஊழியர்கள், பொறியாளர்கள், கணினி வல்லுனர்கள், பட்டதாரிகள் எனவும் மருத்துவம், பொறியியல், கணினி, வணிகம், தொழிற்பயிற்சிகள் போன்ற படிப்புகளை பயிலும் மாணவ மாணவிகள் எனவும், மார்க்க கல்வியை பயிலும் சிறுவர், சிறுமிகள் எனவும் உள்ளனர்.


மேலும் விளையாட்டு துறைகளிலும் சிறந்து விளங்குகிற வாலிபர்கள், விளையாட்டை ஊக்குவிக்கிற நண்பர்கள் போன்ற இவர்களால் நடத்தக்கூடிய விளையாட்டு போட்டிகளால் இத்தெரு மேலும் சிறப்படைகிறது.
இத்தெருவின் சார்பாக இரண்டு பேரூராட்சி உறுப்பினர்களும், ஒரு ரேஷன் கடையும் உள்ளது.


இத்தெருவின் முக்கியமான பகுதிகளாக கருதப்படுகிற கீழ்க்கண்ட சிலவற்றை பார்ப்போம்............


பெரிய ஜும்மா பள்ளி

ஏறக்குறைய முப்பது ஆயிரம் சகோதரர்கள் வந்து அமர்ந்து தொழுவதற்கு இட வசதிகளுடன் கூடிய பெரிய ஜும்மா பள்ளியாக ஊருக்கே பெருமை சேர்க்கிறது. நமதூரில் உள்ள அனைத்து சகோதரர்களால் ஒருமுறையாவது வந்து ஜும்மா தொழுகையை தொழுத இப்பள்ளியில் பெரிய கஃபர்ஸ்தானுடன் இணைந்து உள்ளது குறிப்பிடதக்கது. இப்பள்ளியின் நிர்வாகத்தினரால் நன்கு பராமரிக்கப்பட்டு சீரும் சிறப்புமாக காட்சி அளிக்கிறது.



செடியன் குளம்



சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் உள்ள இக்குளம் மிகவும் பழமைவாய்ந்த அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மக்களுக்கு மிகவும் பயன்பட்டு ஊருக்கே பெருமைச்சேர்க்கிறது. நமதூரைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஒருமுறையாவது இக்குளத்தில் நீராடி சென்றுருப்பார்கள்.

M.M.S. வாடி



நமதூரின் சார்பாக ஒரே ஒரு M. L. A ( மாயாவரம் ) , நகராட்சி தலைவர் ( மாயாவரம் ), பேரூராட்சி தலைவர்கள், அரசியல் கட்சியின் தலைவர், கோட்டை அமீர், வார்டுகளின் பிரதிநிதிகள் என்று உருவாக்கிய இடம். மேலும் பல்வேறு மத்திய, மாநில அரசியல் கட்சி தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அனைத்து முஹல்லவைச் சேர்ந்த பெரியோர்கள் என்று வந்து சென்ற இடம்.


அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் - மஸ்ஜித்
இம்மஸ்ஜித் தெருவின் மேற்குப்பகுதியில் அமைந்து இதனை சுற்றி வசிக்கக் கூடியவர்களுக்கு பெரிதும் நன்மை பயக்கின்றது.


தாஜூல் இஸ்லாம் சங்கம்


இச்சங்கம் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுடன் சிறந்து விளங்குகிறது. இதன் நிர்வாகிகளால் தெருவில் நடக்கக்கூடிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பத்துடன், சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகள் போன்றவைகளையும் தீர்த்து, நல்ல பல ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும் இளைஞர்களால் நடத்தப்படுகிற தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) மும், இத்தாய் சங்கத்துடன் இணைந்து இருப்பதால் கூடுதல் வலிமையுடன் என்னற்ற சேவைப் பணிகளை தொய்வின்றி செயல்படுத்தப்படுகிறது.


மேலும் இச்சங்கத்தை ஒட்டி அமைந்துள்ள கட்டிடத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான “ அல் குரான் “ ஓதுதல் பயிற்சியும் வழங்கி வருவது கூடுதல் சிறப்பாகும்.


ஹஜ்ரத் சேக் நசுருதீன் – தர்ஹா


ஆன்மிகவாதிகளின் புகழிடமாக விளங்குகிறது. மேலத்தெரு , கீழத்தெரு முஹல்லாக்கள் சார்பாக ஆண்டு தோறும் “ கந்தூரி விழா ” சிறப்பாக எடுக்கப்படுகிறது. மேலும் ” மீலாத் நபி விழா “ ஆண்டு தோறும் இவ்வரங்கில் நடைபெறுகிறது.



பெண்கள் மார்க்கெட்


பெண்களுக்காக உருவாக்கப்பட்ட இம்மார்க்கெட்டில் காய்கறிகள், இறால், மீன்கள், ஆடு, கோழி, காடை இறைச்சிகள் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பெண்களும் பொருள்களை வாங்கிச் சென்று பயனடைகிறார்கள்.


சுலைமாக்கா “ பெட்டிக்கடை




நமதூருக்கு குலசேகரப்பட்டினத்திலிருந்து சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு வந்து ஓர் சிறிய பெட்டிக்கடை வைத்து அதன் மூலம் என்னற்ற நண்பர்களை பெற்றவர். இன்னும் அதே பெட்டிக்கடை........! மார்க்க அறிஞராகவும், பேச்சாளராகவும் சிறந்து விளங்குவது என்பது சுலைமாக்கா அவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.


சூனா வீட்டு பள்ளிக்கூடம்

சூனா வீட்டு பள்ளிக்கூடம்” என்ற பெயருடன் அழைக்கப்படும் அரசு “ தொடக்கப்பள்ளி “ யில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ளது. ஏராளமான வல்லுனர்களை உருவாக்கிய இப்பள்ளிக்கூடத்தால் இத்தெருவிற்க்கு பெருமையே.


விளையாட்டு மைதானம்


வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் “ சார்பாக பல வகை விளையாட்டு போட்டிகள் இம்மைதானத்தில் நடத்தப்படுகிறது. குறிப்பாக இரவில் மின் ஒளிடன் நடத்தப்படுகிற வாலிபால் போட்டி மிகவும் பிரபலம். நமதூர் மற்றும் வெளியூர்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச்செல்கிறார்கள்.


மேலும் இம்மைதானம், நிக்காஹ் நிகழ்ச்சிகளுக்கு விருந்து உபசரிக்கும் இடமாகவும் பயன்தறுவது கூடுதல் சிறப்பாகும்.


சிறுவர் பூங்கா


தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) சார்பாக அதன் நிர்வாகிகளால் அமைக்கப்பட்ட இச்சிறுவர் பூங்கா மூலம் இத்தெருவைச் சேர்ந்த ஏராளமான சிறுவர் சிறுமிகள், பெண்கள் என பலரும் பயனடைகிறார்கள்.


ரஹ்மது நூலகம்


M. M. S. அபுல் ஹசன் அவர்கள் நினைவாக இளைஞர்களால் நடத்தப்படுகிற ரஹ்மத் நூலகத்தால் அனைத்து தரப்பினரும் தங்களின் சமூக அரசியல், மார்க்கம், கல்வி, ஆரோக்கியம் போன்ற விழிப்புணர்வுகளுடன் கூடிய புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களைப் படித்து பயன்பெறுகிறார்கள்.


உடற் பயிற்சிக் கூடம்


ஒரு நேரத்தில் பெரும்பாலான வாலிபர்கள் இங்கே வந்து தங்களின் உடல் வலிமையை ஏற்றிச் செல்வார்கள். தற்பொழுது மிகவும் அடக்கமாக செயல்படுகிறது.

ஹாதியாக்கா டீ கடை



இன்றைய வயோதியர்களுக்கு ஒரு பயனுள்ள கடையாக அமைந்துள்ளது. அதிகாலை சுமார் 3 மணியளவில் திறக்கக் கூடிய இக்கடையில் டீயும், பண்ணும் வந்து சாப்பிட்டுவிட்டு அதிகாலை பசியை ஆற்றி செல்கிறார்கள். இதற்கென்று ஒரு பெரிய வயோதியர் நண்பர்கள் கூட்டமே உள்ளது.


தண்ணீர் தேக்க தொட்டி ( WATER TANK )


தமிழக முன்னாள் முதல்வர் M.G.R அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இத் தண்ணீர் தேக்க தொட்டி இத்தெருவில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


முடக்குண்டு குளம்


இக் குளம் பெண்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.


புதுக்குளம்


இதன் பெயர் புதுக்குளம் ஆனால் குப்பைக் கழிவுகளால் பழைய குளம் போல் காட்சியளிக்கிறது.

இறைவன் நாடினால் ! தொடரும்.....................
குறிப்பு : நமதூரில் உள்ள மற்ற தெருக்களின் சிறப்புகளும் பதியப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )

1 comments:

  1. மேலத்தெரு வணிகர் நிறைந்த தெரு ...

    உழைப்பில் என்றும் சளைத்தவர்கள் இல்லை

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers