.

Pages

Sunday, February 26, 2012

[ 5 ] பயண அனுபங்கள் – சீனா

எனது அலைப்பேசி ஒலித்தது. எடுத்தேன்.... பேசினேன்..................! மறுமுனையில் என் சீன நண்பன் “ஜேம்ஸ்” எனக்காக “XingGongDong”  மெட்ரோ ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருப்பதைக் கூறினான்.
ரயில் மெதுவாக நின்றது.......ரயிலிருந்து இறங்கிய நான், எனது நண்பனுடன் நம்மைப்பற்றிய விவரங்களைப் பதிவு செய்து “அடையாள அட்டை” ( Badge ) பெறுவதற்காக அருகில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி வணிகச் சந்தையின் ( Trade Fair ) பதிவு அலுவலகத்துக்கு சென்றோம். முதல் நாள் என்பதால் கடுமையான கூட்டமாகக் காணப்பட்டது.

1.    நுழைவுக்கட்டணம் RMB 200 ( Chinese Currency ) செலுத்தி ( முதல் தடவையாக பதிவு செய்பவர்கள் மாத்திரம் இக்கட்டணத்தை செலுத்தவேண்டும் ) எனது பாஸ்போர்ட், பிஸ்னஸ் கார்டு மற்றும் இரண்டு போடோக்களைக் அவர்களிடம் கொடுத்து பதிவு செய்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டேன்.
2.    இவ்அடையாள அட்டை வணிகச் சந்தை நடக்கும் அரங்கத்திற்குள் நாம் நுழைவதற்கு உதவும்.
3.    ஒரு முறை பதிவு செய்துவிட்டால் ஒவ்வொரு வருடமும் இருமுறை நடக்கும் இவ்வணிகச் சந்தைக்கு ( Trade Fair ) நம் நாட்டில் உள்ள சீன தூதரகத்தில் விசா பெற இலகுவாக நமது முகவரிக்கு இவ்வணிகச் சந்தையின் அமைப்பாளரால் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
4.    இவ்அடையாள அட்டையைப் பயன்படுத்தி நிரந்தரமாக வணிகச் சந்தையில் நாம் பங்குபெறலாம். 

 1957ம் ஆண்டு முதல் துவங்கிய இவ் ஏற்றுமதி இறக்குமதி வணிகச் சந்தை ( Trade Fair ) ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலம் ( Spring ) மற்றும் இலையுதிர்க் காலம் ( Autumn ) என இரண்டு காலக் கட்டங்களில் நடைபெறுகிறது. சீன வரலாற்றில் மிக நீண்டகாலம் நீடித்து, மிகப் பெரியளவில் நடைபெறும் பல்நோக்கு சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியாக, சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் வெளிப்பாடாகவே இவைக் கருதப்படுகிறது.
பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிற இவ்வணிகச் சந்தையின் ( Trade Fair ) மூலம் சீனாவின் தொழில் வளர்ச்சிகள், பொருளாதார மேம்பாடுகள் உயர்ந்த நிலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் பங்களிப்புடன் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. 

சீனர்கள் தங்கள் நாட்டில் உற்பத்திச் செய்யப்படும் ஒரு சிறிய பொருளை எவ்வாறு சந்தைப்படுத்தப்பட வேண்டும் ?
குறிப்பாக............
1.    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் தேவைகள் என்ன ? என்பதை ஆய்வு செய்தல்
2.    திட்டமிடல்
3.    முறைப்படுத்தப்பட்ட நிர்வாகம்
4.    சர்வதேச வணிக சட்ட திட்டங்கள்
5.    மூலப் பொருள்கள் எளிய வழியில் சேகரித்தல்
6.    பொருட்களின் தரம்
7.    விலைகளை நிர்ணயம் செய்தல்
8.    எளிய வகையில் தகவல் பரிமாற்றம்
9.    எளிய வகையில் விநியோகம்
10.  சர்வதேச வணிகச் சந்தைகளில் பங்குபெருதல்
11.  விளம்பரம்
போன்ற வணிக நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்களாக உள்ளார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் பங்காற்றும் அவர்களின் திறமைகள் எனக்கு பெரும் வியப்பாகவே இருந்தது. 
சீன மாணவர்களைப் பொறுத்த வரையில் அதிகளவில் “வணிகத்” தொடர்பான படிப்புகளையே தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.  இவர்கள் பிற நாட்டினரோடு நண்பர்களாகப் பழகுவதை பெரிதும் விரும்புகிறார்கள். குறிப்பாக ஆங்கில மொழி பேசும் திறனை நன்கு வளர்த்துக்கொள்ள இது உதவும் என்பதால் இந்த கூடுதல் ஆர்வம் அவர்களிடையேக் காணப்படுகிறது.
அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட நான், உலகப்புகழ் பெற்ற மிகப்பெரிய அரங்கத்தின் நுழைவாயிலை நோக்கி பயணமானேன்.
நுழைவாயிலில் நடைமுறைப் பணிகளை முடித்துக்கொண்டு அருகே ராஜ கம்பீரத்துடன் ( ? ) காட்சியளிக்கும் ( ! )...............................................

இறைவன் நாடினால்  !   “ பயண அனுபவங்கள் ” தொடரும்.....................

1 comments:

  1. Please visit
    http://nidurseasons.blogspot.in/2012/11/5.html
    சீனா பயண அனுபவம்! - (பகுதி 5)

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers