.

Pages

Saturday, September 29, 2012

இவிய்ங்களே என்ன செய்யலாம் !?


1. மீண்டும் மீண்டும் தவறுகள் செய்துவிட்டு நான் செய்ததுதான் சரி என்று நியாப்படுத்தும் ஆறறிவு ஜீவிகளைக் கண்டு மனம் வெறுப்படைகின்றீர்களா ?

2. வேகாத வெயிலில் வேர்த்து விறுவிறுக்க கால் கடுகடுக்க வரிசையில் நிற்போரை சட்டை செய்யாமல் குறுக்குவழியில் உள்ளே நுழைகின்றோரை ஓங்கி அறையனும் போல் உள்ளதா ?

3. குடி குடியைக் கெடுக்கும் எனத் தெரிந்தும் மீண்டும் மீண்டும் அத்தவறை செய்துவிட்டு தன்னையும் தன் குடும்பத்தையும் அழித்துக்கொள்வோரை நினைத்து வேதனைப்படுகின்றீர்களா ?

4. தன் கடமையை செய்வதற்காக நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு ஊக்கத்தொகை கேட்டு நச்சரிக்கும் மக்கள் சேவகர்களை நினைத்து வருந்துகிறீர்களா ?

5. சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் வேகமாகப் பயணம் செய்து விபத்துகளை ஏற்படுத்தி அதில் தன்னையும் பிறரையும் துயரத்திற்கு இழுத்துச் செல்வோரை நினைத்து வெட்கப்படுகின்றீர்களா ?

6. பணத் தேவையுடையோரை தேடிப்பிடித்து பணத்தைக் கொடுத்து மீட்டர் வட்டி, நாள் வட்டி, வார வட்டி, மாதவட்டி, கந்துவட்டி, சீட்டு, ஒத்திக்கு போன்ற பெயர்களைச் சொல்லி பண வசூல் செய்யும் கொடூரவாதிகளின் மூஞ்சில் காறி உமிழத் தோன்றுகிறதா ?

7. சமூகத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்ற கல்விப்பணி, மருத்துவப்பணி போன்றவற்றில் இருந்துகொண்டு பிறருக்கு எடுத்துக்காட்ட இருக்கக்கூடியவர்கள் தவறுகள் செய்யும்போது ஏற்படும் இழப்பீடுகள் உங்களை அச்சமடையச் செய்கின்றதா ?

8. வயதான தன் பெற்றோர்களை அவர்களின் முதுமைக் கருதி ஓய்வெடுக்க அனுமதிக்காமலும், அவர்களுக்குரிய பணிவிடைகளைச் செய்யாமலும் எந்நேரமும் எரிஞ்சி விழும் சிடுமூஞ்சிக்காரர்களிடமிருந்து எட்டி நிற்க தோன்றுகிறதா ?

9. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள்,அவர்களின் எதிர்காலம், பெற்றோர்களின் கண்ணியம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு கள்ளக்காதலில் ஈடுபடும் கேடு கெட்ட மனிதர்களைக் கண்டவுடன் கோபம் கொள்கிறீர்களா ?

10. தவறுகள் நடக்கும் இடத்தில் ஆணித்தரமாகக் தவற்றைச் சுட்டிக்காட்டி தடுக்காமல் தன் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக வளைந்து கொடுக்கும் பதவி வெறிப்பிடித்தவர்களின் போலி வேஷத்தைக்கண்டு கொதிப்படைகின்றீர்களா ?

இவிய்ங்களே என்ன செய்யலாம் !?

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

2 comments:

  1. நெஞ்சு பொறுக்குதில்லையே
    இந்த நிலை கெட்டமானிடரை
    நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே

    ReplyDelete
  2. அருமையான பதிவு...

    இவர்கள் பட்டாள் திருத்துவார்கள் என்பது பழப்மொழி ஆனால் இவர்களுக்கு கிடைக்க கூடிய பணம் தடுக்க படவேண்டும். அப்போது தான் இவர்கள் திருத்துவார்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers