.

Pages

Wednesday, November 14, 2012

[ 12 ] ஏன் அழுதாய்...? 'அழும் குரல்' தொடர்கிறது...

பூவே...
நீ பச்சை பசுஞ்சோலையை 
உன் வண்ணத்தால் அலங்கரிப்பாய் 
உன் வாசத்தால் அந்த பகுதியையே
மனம் கமழ்ந்திட வைப்பாய் 
உன் வாசம் மட்டுமா அழகு
சுவைதரும் தேன்தரும் உன் நற்குணம்
இப்படி நல்ல பல குணம் கொண்ட நீ
ஏன் அழுதாய்...!

இதோ பூவின் பதில்
செடிகளின் செல்லம் நான்
நான் நிறைந்த இடம் பூங்கா வாகும்
மொட்டுக்கள் மலர வண்டு காத்திருக்கும்
மனிதனின் மனம் கவர்ந்த நான்
மகிழ்விக்கும் அத்தனை நிகழ்விற்கும்
நானே முதலிடம் பூமாலை சூட்டி
மரியாதை என்பது மரியாதையின் உச்சம்
கழுத்தில் சேர கெளரவங்கள் சேர்ப்பேன்
கண்ணியமாய் நானிருந்த நேரம் ஆனால்
இப்போது பொதுக்கூட்டம் என்ற பெயரில்
பலரை வசை பாடும் படு பாதகற்களுக்கு
மாலை சூட்டி மகிழ என்னை அவன்
கழுத்திற்கு செல்லுமுன்
தூக்கி எரியும் எத்தனின் நிலை கண்டு
குப்பையிலிருந்து வதங்கி அழுகிறேன்

அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...

3 comments:

  1. பிறரை சந்தோசப்படுத்தும் 'பூ'விற்குள் இம்புட்டு சோகமா !?

    'பூ'வின் சிறப்புகளோடு சமூக அவலங்களை ஒப்பிட்டு தந்துள்ளது சூப்பர்

    தொடரட்டும்...

    ReplyDelete
  2. பதிவுக்கு முதலில் நன்றி.

    சேக்கனா M. நிஜாம்November 14, 2012 3:21 PM
    பிறரை சந்தோசப்படுத்தும் 'பூ'விற்குள் இம்புட்டு சோகமா !?

    'பூ'வின் சிறப்புகளோடு சமூக அவலங்களை ஒப்பிட்டு தந்துள்ளது சூப்பர்

    தொடரட்டும்...

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    ReplyDelete
  3. மல்லிகை பூவின் அருமை பெண்களுக்கு தெரியும் ரோஜா பூவின் அருமை காதலர்களுக்கு தெரியும் இவைகளின் சோகம் நமது சகோதர் அதிரை சித்திக்கு மட்டுமே தெரியும் என்ன ஒரு அருமையான வரிகள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers