.

Pages

Monday, November 5, 2012

[ 3 ] கல்விக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் ?

அரசு அதிகாரிகள் தத்தம் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் என்னென்ன வசதிகள் உள்ளன. என்னென்ன வசதிக் குறைபாடுகள் உள்ளன, முறையான பராமரிப்புகள் செய்யபடுகின்றனவா என்பதை பள்ளியின் நுகர்வோரான பெற்றோரே நேரில் சென்று சமூக ஆய்வு [ Community Inspection ] என்ற வகையில் பார்த்துக் குறைபாடுகளை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வது அதிகபட்ச நலம் பயக்கும் எனக் கருதப்படுகிறது.

இவ்வகையில்,
1. மாணவ, மாணவியரின் தாய்மார்கள், வாரத்தில் ஒரு நாள், 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நாள்களில் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

இவர்களின் பார்வைக் குறிப்புகள் ஒரு பார்வைப் புத்தகத்தில் தொடர்ந்து பதிவு செய்யப்பட வேண்டும். தாய்மார்களைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவாறு பல்வேறு வகுப்புகளில் இருந்து பிரதிநிதிகள் உள்ளடக்கியவாறு அமைதல் வேண்டும்.

 வகுப்புகள்
1. மழலையர் வகுப்பு - 1 நபர்

2. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை - 1 நபர்

3. 4-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை - 1 நபர்

4. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை - 1 நபர்

5. 11-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை - 1 நபர்

1. ஒருமுறை பார்வையிட்ட குழுவைச் சேர்ந்தவர்களே திரும்பவும் பார்வையிடும் வண்ணம் இருத்தல் கூடாது. பிரதிநிதிகள் குலுக்கல் முறையில் [ Random Method ] தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

2. பள்ளியில் உள்ள கழிப்பறை, குடிநீர் வசதி, ஆய்வக வசதி, கணினி வசதி, நூலக வசதி, விளையாட்டு வசதிகள், வகுப்பறை வசதிகள் போன்ற எல்லா வசதிகளையும், பள்ளியின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு இவர்கள் தங்களது பார்வைக் குறிப்பைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்தக் குழுவின் பார்வைக் குறிப்புகளை ஒவ்வொரு வாரமும் பார்வையிட்டு குறைபாடுகள் உள்ள இடங்களில் அதனைச் சரி செய்ய தாளாளர், செயலர், முதல்வர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் நடவடிக்கைகள் குறித்த குறிப்பு எழுதப்பட்டு, அதில் தாளாளர், செயலர் ஒப்பமிட வேண்டும்.

இந்தக் குழுவினர் பார்வையிடும்போது பள்ளியின் முதல்வரோ அல்லது அவரின் பிரதிநிதியோ உடன் இருக்கலாம்.

 பள்ளி நிர்வாகக்குழு :
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

இக்குழுவின் நிர்வாகிகள் மற்றும் அதன் பணிகள், திட்டங்கள் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும் என்பது அரசால் குறிப்பிடப்படுகிறது.

குழுவின் நிர்வாகிகள் :

1. குழுவில் 75 சதவீதம் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் இடம்பெற வேண்டும். பொருளாதார, சமூக ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கும் குழுவில் வாய்ப்பளிக்க வேண்டும். மீதமுள்ள 25 சதவீத உறுப்பினர்கள் பின்வரும் விகிதத்தில் இடம்பெற வேண்டும்.

2. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தும், மற்றொரு பங்கு உறுப்பினர்கள் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்தும், இன்னொரு பங்கு உறுப்பினர்கள் உள்ளூர் கல்வியாளர்களிலிருந்தும் நியமிக்கப்பட வேண்டும்.

3. பெற்றோர் உறுப்பினர்களில் இருந்து குழுவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், அவர் இல்லாத பள்ளிகளில் பள்ளியின் மூத்த ஆசிரியர் இந்தக் குழுவின் பதவி வழி உறுப்பினராகவும், அமைப்பாளராகவும் செயல்படுவார்.

4. இந்தக் குழு மாதத்துக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களை பொதுமக்களின் பார்வைக்கும் வைக்க வேண்டும். குழுவில் மொத்தமாக 50 சதவீத பெண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். பள்ளி நிர்வாகக் குழுவில் 20 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

குழுவின் பணிகள் :
1. ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

2. இப்பகுதியை சுற்றி வசிக்கும் அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்வதையும்,     அவர்கள் தொடர்ந்து கல்வி பயில்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

3. குழந்தைகளின் உரிமை மீறப்படும்போதோ, அவர்கள் துன்புறுத்தப்படும்போதோ, பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படும்போதோ உள்ளூர் கல்வி அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

4. குழந்தைகள் கல்வி பயில்வதற்குத் தடையாக
கல்விக் கட்டணம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

5. சத்துணவு வழங்கும் திட்டத்தை மேற்பார்வையிட வேண்டும். பள்ளிகளில் கற்பித்தலைத் தவிர ஆசிரியர்கள் தனிப் பயிற்சி எடுக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் :
1. ஒவ்வொரு பள்ளி நிர்வாகக் குழுவும் ஒவ்வொரு ஆண்டுக்கும் பள்ளி
மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். நிதியாண்டு முடிவதற்கு
குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முன்னதாக இந்தத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

2. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் அல்லது
துணைத் தலைவர், அமைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்பிடம் வழங்க வேண்டும்.

3. பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விப் பணிகள் தவிர வேறு பணிச் சுமைகள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

4. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் பணிகள் தவிர பிற பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

5. பள்ளிச் செலவுக் கணக்குகளையும், உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து பெறப்படும் நிதி குறித்த கணக்குகளையும் தனியாகப் பராமரிக்க வேண்டும்.

6. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாகக் குழுவை
அமைப்பதற்கான நடவடிக்கைகளை திட்ட இயக்குநர் எடுக்க வேண்டும்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

4 comments:

  1. மூன்று பகிர்வுகளும் மிகவும் அருமை... பல தகவல்களின் தொகுப்பு... பயனுள்ளவை... மிக்க நன்றி...

    ReplyDelete
  2. பதிவுக்கு முதலில் நன்றி.

    மாணவச்செல்வங்களும் சரி, படித்துக் கொடுக்கும் ஆசிரியப் பெருமக்களும் சரி, பெற்றோர்களும் சரி, இம்மாதிரி சிந்தித்து இருப்பார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. மூன்று பகிர்வுகளும் மிகவும் அருமை... பல தகவல்களின் தொகுப்பு... பயனுள்ளவை... மிக்க நன்றி

    ReplyDelete
  4. அருமையான பதிவு எப்படி காக்கா இப்படியல்லாம் உங்களுக்கு மட்டும் தோணுது ஆக என்ன ஒரு அருமையான விளக்ககள்.மூன்று பதிவுகளும் அருமை மிக அருமை வாழ்த்துக்கள்.நிஜாம் காக்கா அவர்களுக்கு.இன்னும் இது போன்று கட்டுரைகள் பதிய வேண்டும்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers