.

Pages

Sunday, December 16, 2012

[ 4 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...

முதுமையை தொட்ட மங்கை
பதுமையாய் காட்சி தந்தாள்
தங்க நகை பல அணிந்து
வீதியிலே பவனி வந்தாள்
பார்பவர்கள் நகைத்திருக்க 
பக்கத்திலே கள்வனவன் 
தற்றுனம் பார்த்து நகைதன்னை 
பறித்து சென்றான்
அனைவருமே பதை பதைத்திருக்க 
கவிஞானியோ சிரித்து நின்றார்

ஏன் சிரித்தீர் என்று கேட்க 
ஞானி அவர் பதில் பகர்ந்தார் 
பாவி மகள் அணிந்த நகை 
பாவத்தின் சின்னமைய்யா
தான் பெற்ற மகனுக்கு 
மணமுடித்த பெண்ணிடம் 
வரதட்சனையாய் வாங்கியதுவே 
தட்சனை என்ற சொல் 
தரம் கெட்டு போனதுவே 
முன்பு ஒரு காலத்தில் 

குருவுக்கு கொடுப்பதுதான் 
குரு  தச்சனை என்றழைத்தார்கள்
 குருவுக்கு கொடுக்கும் பணி விடை 
குருவுக்கு கொடுக்கும் மரியாதை 
குருவுக்கு கொடுக்கும் வெகுமதி 
தட்சணை என்றழைத்தனர்

வரனுக்கு
மனகையின் அங்கமும் 
அதற்கு தங்கமும் கொடுப்பது 
தட்சனை என்றழைப்பது 
தட்சணை என்ற சொல்லும் 
தரம் கெட்டு போனதுவே 

வயதுக்கு தகுந்தார் போல் 
ஆசையையும் குறைக்க வேண்டும் 
பிள்ளைக்கு மணமுடித்து 
கண்குளிர பார்பதோடு 
நம் கடமை முடிந்த தென்று 
பெற்றோர்கள் நினைக்க வேண்டும் 

வீட்டீற்குள் புகுந்த மங்கை 
அணிந்து வந்த தங்கமதை 
அதை நாமும் அணிந்திடனும் 
என்று யாரும் நினைத்திட்டால் 
இது போன்ற நிகழ்வுகள் 
நடப்பதுதான் சகஜமையா 
அதை நினைத்தே நான் சிரித்தேன் 
என்றாரே கவிஞானி...! 

'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்

5 comments:

  1. வரதட்சனை எனும் சமூகக்கொல்லி ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.

    சமூக அவலங்களை நினைத்து கவிஞானி நன்கு சிரிக்கட்டும்.

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. கவிஞானி சிரிப்பின் அர்த்தம் புரிகிறது .காலக்கொடுமையை நினைத்து கவிஞானி சிரிக்கிறார். இன்னும் சிரிக்கட்டும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  3. வயதுக்கு தகுந்தார் போல்
    ஆசையையும் குறைக்க வேண்டும்
    பிள்ளைக்கு மணமுடித்து
    கண்குளிர பார்பதோடு
    நம் கடமை முடிந்த தென்று
    பெற்றோர்கள் நினைக்க வேண்டும்

    ஆமாம் கண்டிப்பாக உணர வேண்டிய வரிகள்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    பல அழும் குரல்கள் வந்து போயின.
    பல சிரிப்பு குரல்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றன.
    அடுத்தது என்ன குரல் ஒலிக்கப் போகுது?
    தயவு செய்து கோபக் குரல் மட்டும் ஒலிக்க வேண்டாம். அப்புறம் இந்த இணையுதளமே அதிர்ந்துவிடும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. அதிரை சித்தீக் சிறப்பான கவிதையும் தருகிறார் அத்துடன் கமெண்ட் அடிப்பதில்Top commentators முதல் இடத்தில இருகின்ரார் வாழ்த்துகள்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers