.

Pages

Sunday, February 17, 2013

வினோதினிகளுக்கு அறிவுரை !

வினோதினி மரணச் செய்தி கேட்டு மரணத்திற்கு காரணமான சுரேஷ் அதிர்ச்சி. தன்னாள் மரணமடைந்த, தன்னை விட்டு பிரிந்த வினோதினியின் இடத்திற்க்கே என்னையும் கொண்டுபோய் சேர்த்திடுங்கள் என்னை தூக்கிலிடுங்கள் என்று புலம்பல். இது செய்தியாக ஒரு பத்திரிக்கையில் கண்டேன் !

நாமெல்லாம் வினோதினி மரணச் செய்தி கேட்டு வருத்தப்பட்டோம் ஒரு துளி கண்ணீர் விட்டோம். மரணத்திற்கு காரணமான அந்த ஆடவன் தன்னுயிரை எடுக்கச்சொல்லி கதறுகிறான் புலம்புகிறான் தன்னுயிரை துச்சமாக கருதுகிறான். தான் காதலித்த பெண்னவளை படுகாயப்படுத்தி பரிதவிக்க விட்டு பரலோகம் அனுப்பிய படு பாதகச்செயலை செய்துவிட்டு இன்று தன்னுள் புலம்புகிறான் காரணமென்ன ?

பொதுவாக ஓர் ஆண் தன் பெண் நண்பர்களோடு பழகையில் நன்றாய் பழகினாளே காதலை சொல்லும் பொழுது தவிர்க்கிறாளே காரணம் புரியாது பரிதவிக்கின்றனர் பல ஆடவர்கள். சிலருக்கு வேரு சம்பவங்கள் காதலை ஏற்றுக் கொண்டவள் வேரு வசதியுள்ள ஆடவர் கிடைக்கயில் முதலாவது காதலித்த ஆடவண் கைவிடப் படுகையில் பாதகச்செயலை செய்து விடுகிறான்.

ஓர் ஆணும் பொண்னும் தனிமையில் இருக்கையில் சைத்தானும் கூடவே இருக்கிறான் இது முஹம்மது [ ஸல் ] அவர்களின் பொன்மொழி கூடப்பிறந்த இரு பாலினரும் சிரு வயதில் ஒன்றாய் படுத்துறங்கியதை வயதிற்கு வந்த பின்னும் தொடர்வது எப்படி சரியில்லையோ அது போல்தான்
அன்னிய ஆணுடன் பெண்ணும் அன்னிய பெண்ணுடன் ஆணும் பழகிடலும் கூடாது.

Boy Friend, Girl Friend கலாச்சாரம் ஆபத்தில் கொண்டுபோய் முடியும் பழகும் போதே விலகி இருந்தால் பாதகச் செயலுக்கு வேலை இல்லை.

பண்போடு பழகுவோம் ! பண்பட்டு வாழ்வோம் !!

மு.செ.மு.சபீர் அஹமது

15 comments:

  1. ஆண் பெண் பழக்குவது மிகவும் தப்பானது தான் ஏன் என்றால் அதுதான் முதல் படி இந்த முதல் படி லேசா சரிகினாலே அவ்ளவுதான் அது பெரிய பாதாளம் தான். விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் சபீர் அஹமது காக்கா அவர்களே.

    ReplyDelete
  2. பண்போடு பழகுவோம் ! பண்பட்டு வாழ்வோம் !!

    அழகிய பொன்மொழி !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. வினோதினி மற்றும் அவரது குடும்பத்திற்கு சுரேஷ் ஒன்றும் புதிதான நபர் அல்ல. நன்கு பழகிய, அடிக்கடி வீட்டிற்கு வரும் நபராகவே இருந்துள்ளார். வினோதினியின் படிப்பு செலவு மற்றும் குடும்ப செலவுகளுக்கு சுரேஷிடம் இருந்து பணம் வாங்கி செலவு செய்துள்ளனர். வினோதினி மேல் சுரேஷிற்கு உள்ள அன்பு கல்யாண முடிவிற்கு எடுத்து சென்றுள்ளது. வினோதினியின் தந்தைக்கு இந்த செயல்கள் அனைத்தும் தெரியும். விநோதினியை தனக்கு கட்டி வைக்குமாறு காவல் நிலையத்தில் சுரேஷ் செய்த மனு இன்றும் உள்ளது. வினோதினி படிப்பு முடிந்தவுடன், அவருக்கு நல்ல வேலை கிடைத்தவுடன் அவரின் மற்றும் அவரது குடும்ப நபர்களின் போக்கு சுரேஷிற்கு பாதகமானது. அவர்கள் சுரேஷை உதாசீன படுத்த தொடங்கினார்கள். இதன் மிதமிஞ்சிய போக்கே அவரின் மேல் அமிலம் வீச காரணம். தன்னை நம்ப வைத்து செய்த துரோகத்தை தாங்கமுடியாத ஒரு ஆணின் காதல் மனம் இந்த முடிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. அதனை பற்றி யாரும் பேசுவதில்லை.

    பெண்ணை பற்றியே பேசுகிறார்கள். முடிவு வருந்ததக்கது. மீண்டும் இது போல நடக்காமல் இருக்க கடவுளை இறைஞ்சுவோம்.
    அது போல இது முற்றிலும் பெண்களுக்கான ஒரு படிப்பறிவே தவிர ஆண்கள் இதில் திருந்த வேண்டியதில்லை.
    ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே. உலகத்தை உருவாக்குவதும் அழிப்பதும் அவர்களே.

    தயவு செய்து திருந்துங்கள் விநோதிநிகளே?

    Brgds
    Karthi

    ReplyDelete
    Replies
    1. இதே கருத்தில் நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.

      http://swamysmusings.blogspot.com/2013/02/blog-post_15.html

      ஆனால் மக்கள் இந்தக் கருத்தை சரியான முறையில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

      Delete
  4. பண்போடு பழகுவோம் ! பண்பட்டு வாழ்வோம் !!


    மிக்கசரியான விழிப்புணர்பதிவு

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே.
    பல நெடுங்காலத்திற்கு முன் சும்மாவா சொல்லிவைத்தார்கள்,

    சகோதரர் கார்திக் அவர்களின் கருத்தையும் எடுத்து பார்க்க வேண்டியாதாயிருக்கின்றது.

    கடுந்துயரப்பட்டு மரணமடைந்த சகோதரி வினோதினியின் காதலன் மிஸ்டர் சுரேஷ் அவர்கள் அவசரப்பட்டுவிட்டார், எதிர் நீச்சல் போடத்தெரியாதவர்கள் ஆற்றிலோ அல்லது குளத்திலோ இறங்கி இருக்கக்கூடாது.

    விதியென்று இப்படி போனது போகட்டும் என்று இருந்து விடாமல் இனிவரும் காலங்களில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி எதிர் நீச்சல் போடத்தெரிந்தால் மட்டும் காதலில் இறங்குங்கள், அதே நேரத்தில் நிதானம் தேவை.

    மிஸ்டர் சுரேஷ் அவர்கள் விடா எதிர்நீச்சல் போட்டிருந்தால் நிச்சயம் வெற்றி கிடைத்துருக்கும்.

    அவசரம் ஆத்திரம் ஆளையே விழுங்கிவி்ட்டது.

    இனியாவது நிதானித்து செயல்படுங்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  6. கருத்திட்ட அனைவரும் பயனுள்ள அறிவுரைகளை தந்து இருக்கிண்றீர்கள் ஜலீலா கமால் அவர்களுக்கும்
    கார்த்தீக்கும் வரவேற்ப்புக்கள்

    ReplyDelete
  7. ஆண், பெண் இருவர் பாலுணர்வில் வேறு படுவதால் நெருங்கிப்பழகாமலும், பேச்சில் குழைவில்லாமலும், அழகில் ஆணவம் கொள்ளாமலும் இருந்தால் எந்த ஆபத்துமில்லை.

    இதுவே நிதர்சன உண்மை.

    ஆனால் வினோதினி போல ஒரு அப்பவிப்பெண்ணை அடைய விரும்பும் நோக்கில் அநியாயமாக ஆசிட் வீசி அசிங்கப்படுத்தி அந்த பிஞ்சுயிரை பஞ்சாய் பறக்க வைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

    ReplyDelete

  8. பண்போடு பழகுவோம் ! பண்பட்டு வாழ்வோம் !!மிக்கசரி

    ReplyDelete
  9. வினோதினி விசயத்தில் ..ஆசிட் வில்லன்

    சுரேஷ் ..பணம் கொடுத்து மனம் புரிய

    ஆசைப்பட்டது .ஒருபோதும் சரியல்ல..அப்பாவியாய் அலுத்து புலம்பும் வினோதினியின் அப்பா அந்நியனை வீடு அனுமதித்தது தவறு ..

    ReplyDelete
    Replies
    1. //அப்பாவியாய் அலுத்து புலம்பும் வினோதினியின் அப்பா அந்நியனை வீடு அனுமதித்தது தவறு ..//

      சரியான நடைமுறை. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க ஓடுபவர்கள்தான் அதிகம்.

      Delete
  10. புதிய வரவுகள் பழனி கந்தசாமி அவர்கள், அவர்கள் உண்மைகள்.இருவருக்கும் வரவேற்ப்புகளும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  11. விநோதினியும் , குடும்பத்தார்க்ளும் சுரேஷின் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை உதாசீனம் செய்தது போல் , பணக்காரப் பையன்களை வளைத்துப் போட தன் அழகைக் காட்டி மயக்கிப் பணத்தைப் பெற்று நன்றாக அப்பணத்தைச் செலவு செய்து விட்டு அப்பையன்களை உதறி விடும் கொடுமைகளை நானும் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.

    1) சுயக் கட்டுப்பாடு இல்லாத ஆடவனின் தவறு

    2) பணத்தைக் கொள்ளையடிக்க குடும்பத்தோடு செய்யும் சூழ்ச்சி.

    3) தம்மை ஏமாற்றப் போகின்றார்கள் என்று உள் மனத்தினில் ஓர் எச்சரிக்கை மணி அடித்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் பணத்தை இப்படி அள்ளி வீசி விட்டு, உள்ளமும் உடைந்தவனாய், மயக்கிய மங்கையின் “மாயஜாலங்களை” இன்னமும் மறக்காதவனாய்ப் புலம்பிடும் ஆடவனின் “பைத்தியக்காரத்தனமான” காதல்.

    4) ஆசிட் வீசாமல் இருந்திருந்தாலும், அப்பெண் வேறொருவனுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாலும், விடாமல் அவளைப் பார்க்க வேண்டும் என்று துடிக்கும் உந்துதல்.

    இப்படிப்பட்ட நிகழ்வுகளுடன் மனோநிலைகளுடன் தான் இற்றைப் பொழுதின் இளைய சமுதாயம் மட்டுமல்ல; திருமணமாகி வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் பலர் உளர்.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. youngsters must read this. now this type of actions spread in our native also .

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers