.

Pages

Thursday, June 27, 2013

நச்சுக்கிரிமிகள்

நல்ல
உள்ளங்களின்
மெல்லிய
உணர்வுகளைக்

கள்ளமாய்ப்
பயன்படுத்திக் கொள்ளும்
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்
அன்புடன் புகாரி

7 comments:

  1. 'நச்'சுக்கிரிமிகள் கவிதை சும்மா 'நச்'சுன்னு இருக்கு !

    ReplyDelete
  2. // நல்ல
    உள்ளங்களின்
    மெல்லிய
    உணர்வுகளைக்

    கள்ளமாய்ப்
    பயன்படுத்திக் கொள்ளும்
    நச்சுக் கிருமிகள்
    சுபிட்சமாய் வாழும்வரை...
    இந்த பூமி
    துக்கம் மட்டுமே
    நிறைந்த
    மயான பூமிதான் //

    சரியாகச்சொன்னீர்

    ReplyDelete
  3. சுருங்கச்சொன்னாலும் சுளீரென்று உறைக்கவைக்கும் சுள்ளாய்ப்பான வரிகள். சும்மா நச்சிண்டு இருக்கு.அருமை.

    வாழ்த்துக்கள் நண்பரே.!

    ReplyDelete
  4. உள்ளத்தில் நஞ்சை வைத்து

    நாவில் தேனை தடவி பேசும்

    நயவஞ்சக பூமி இது ..

    என்பதை கூறும் கவி

    ReplyDelete
  5. மெய் மறைத்து
    பொய் பகட்டு
    மயக்கும் உலகில்
    தாக்கம் கண்டார்.

    சிந்தித்து புதையல்
    சிறேத்தே கொண்டு
    இகத்து கவிஞர்
    புறேத்தே தந்தார்

    நல்ல
    உள்ளங்களின்
    மெல்லிய
    உணர்வுகளைக்

    கள்ளமாய்ப்
    பயன்படுத்திக் கொள்ளும்
    நச்சுக் கிருமிகள்
    சுபிட்சமாய் வாழும்வரை...
    இந்த பூமி
    துக்கம் மட்டுமே
    நிறைந்த
    மயான பூமிதான்

    ஆம்! அறிவு
    அழகாய் சொன்னார்
    அன்புடன் புகாரி
    அது போன்று...

    புனிதர் உள்ளம்
    சொன்ன உண்மை
    நஞ்சு நரியும்-அதில்
    திட்டம் வகுத்தது.

    பணம் பன்ன
    குணம் கெட்ட
    குள்ள நரியின்
    வித்தை யது.

    பகுத்த அறிவு
    பகுத்து பார்த்து
    இருக்கும் இறை
    இல்லை என்றது!

    பூமி தட்டை
    பகுத்து கண்டது
    பின்பு கோலம்
    என்று சொன்னது.

    இந்த உண்மைகள்
    இருப்பது போல
    நச்சு திணிக்க
    நன்கு தீட்டியது.

    பகுத்த அறிவே
    தகுந்த கருவியென
    வகுத்து கொண்டு
    களம் வந்தது.

    உண்மை அதில்
    உள்ளில் அழகாய்
    வெளியில் மின்ன
    திறமை நுழைத்து.

    தேனை தடவி
    வண்ணம் பூசி
    கள்ள வஞ்சகம்
    நூலை விட்டது.

    இகத்து இளமை
    அகத்து ஏற்று
    பகுத்த அறிவு
    என்றே ஏமாறின.

    இன்றதனால் இந்த
    நல்லவர்வாழ் பூமி
    மயான கோலம்
    நிறைந்தே உள்ளது.

    இது போன்ற
    ஏமாற்று கண்ட
    அன்புடன் புகாரி
    அழகுற தந்தனரோ!.

    ReplyDelete
  6. நச்சுக் கிருமிகளாம்
    நயவஞ்சக நெஞ்சோரை
    நச்சென்று
    நாலு வரிகளில்
    பச்சென்று
    பதியும் வண்ணம்
    பதிந்தது நும் புலமை!

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers