.

Pages

Saturday, July 27, 2013

[ 5 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' தொடர்கிறது...

முதல் கட்ட வளைகுடாவிலிருந்து வந்தவர்களிடம் பெற்ற தகவல் இளைஞர் கூட்டத்தை ஒரு கனவு பூமியாக  பணம் கொழிக்கும் பூமியாக பார்க்க வைத்தது எப்படியாவது வளைகுடா நாடுகளுக்கு செல்ல  வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது. இதன் விளைவாக பல இளைஞர்கள் பம்பாய் பயணம் செல்ல வைத்தது.

அங்கு பலமாதங்களாக வளைகுடா செல்ல முயற்சி செய்தவர்கள், தனக்கு வாய்ப்பு கிடைக்காத தருவாயில், விசா ஏஜெண்டுகளாக மாறி பயணம் செல்பவர்களுக்கு வழிகாட்டியாக பயணம் செய்ய உதவிடுவர் [ பம்பாய் அனுபவங்கள் பற்றி இடையிடையே சுவையான அனுபவங்களை தருகிறேன் ] இப்படி செல்லும் நம்மவர், ஒப்பந்தம் அடிப்படையில் வேலைக்கு செல்வதில்லை. ஏதாவது ஒரு கம்பெனியில் ஊழியராக அல்லது அரபியின் வீட்டுக்கு கார் ஓட்டுநராக மற்றும் வீட்டு வேலை செய்பவராக  செல்வர். இதன் மூலம் நம்மவரின் பார்வை விசாலமானது. பல அரபிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு. அவர் தம் உறவினர்களுக்கு விசா எடுக்க எதுவாக அமைந்தது.

வெளி நாட்டிலிருந்து விடுப்பில் வருபவர்களிடம் உற்றார் உறவினர் தன் வீட்டு பிள்ளைகளுக்கு அரபு நாடுகளுக்கு விசா எடுக்க வேண்டுவர்.

அது போன்ற நிகழ்வை இங்கு விளக்க விரும்புகிறேன்...

ஒரு மூதாட்டி தனது பேரனுக்கு  ஒருவரிடம்  விசா   ஏற்பாடு செய்யச் சொல்கிறார். என் பேரன் சரியா படிக்கல, சும்மா ஊர் சுற்றுகிறான் ஏதாவது ஒரு வேலை அரபு நாட்டில் கிடைக்குமாயின் எனது பேரனுக்கு ஏற்பாடு செய்து உதவி செய்தால்அது எனது  குடும்பத்திற்கு செய்யும்  பெரிய உதவியாய் இருக்கும் என்று கோரிக்கை வைத்தார்.

வீட்டு வேலை பார்ப்பானா ? உங்கள் பேரன் என கேட்டார்...

என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்ல தம்பி என்றார்.

பேரனுக்கு விசாவும் தயாராகி பயணம் மேற்கொள்கிறான் அந்த இளைஞன் வெட்டிப்பேச்சு, கூட்டாளிகளிடம் கும்மாளம் என்று அலைந்த அந்த இளைஞன், வயதான முதியவர்களை என்ன பெருசு !? என்ற தோரணையில் பேசி பழகிய அவனுக்கு, வீட்டு வேலை பார்க்க வேண்டும். வயதான அரபிக்கு உதவியாய் இருக்க வேண்டும். அந்த கிழட்டு அரபியோ விவரமானவர் அந்த இளைஞனோ  ஊர் சுற்றி திரிந்தவன் குறும்பு குறையாத நிலை அரபி ஏதாவது உதவி நாடி அழைப்பார்.

என்னடா கிழட்டு பயலே ! [ நாகரீகம் கருதி வார்த்தை மாற்றி உள்ளேன் ] என்றவாறு சொல்வான்.

வேலைக்கு சென்று ஆறு மாதமாக இதே வார்த்தை ! தனக்கு புரியாத மொழியில் எப்போதும் பேசியதை அறிய முற்பட்டார் அந்த அரபி அக்கம்பக்கத்தில் வீட்டில் வேலை பார்க்கும் இலங்கை தமிழ் பெண்மணிகளிடம் அந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த அரபி மனவருத்தம் அடைந்தார்.

நல்ல பதவியில் இருக்கும் மகனிடம் நிலைமையை கூறி வருத்தப்பட அந்த அரபியன் மகனுக்கு கோபம் உச்சத்திற்கு ஏற !

கோபமாய் வெளியே சென்றார்.

அடுத்த நாள் அரபியின் மகன் வீட்டிற்கு வந்து தந்தை அருகில் இருந்து கொண்டு அந்த இளைஞனை அழைக்க சொன்னார் .

ஆறு மாதமாகியும் வேலையில் ஈடுபாடு இல்லாத அந்த இளைஞன்

என்னடா கிழட்டு பயலே ! என்றவாறு அந்த அரபி இருப்பிடம் சென்றான்.

அருகே அரபியின் மகன் இருந்தார்.

அரபியின் மகன் அந்த இளைஞனிடம்...

நாம் மூன்று நாள் கட்டம் வெளியூர் செல்கிறோம். எனவே உனது முக்கிய பொருள்களை பெட்டியில் எடுத்துக்கொள். நாம் சென்று வரலாம் என அழைத்தார்.

குதூகலத்துடன் அவசரமாக அரபியின் மகனுடன் புறப்பட்டான்.

சற்று நேரத்தில் விமான நிலையம் அடைந்தார்கள்.

குடியமர்வு துறை அதிகாரி வசம் அந்த இளைஞன் ஒப்படைக்கப்பட்டு இந்தியா அனுப்பி வைக்கப்பட்டான்.

அந்த இளைஞனிடம்... எனது தந்தையை நீ தர குறைவாக பேசியதற்கு இது தான் பரிசு !

இது தேவையா ? விசுவாசமாய் வேலை செய்து உயர் நிலையை அடைந்தவர்கள் பற்றி அடுத்த வாரம் கூறுகிறேன்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

10 comments:

  1. தந்தைக்காக மகன் கொடுத்த பரிசு சரியானதே !

    // விசுவாசமாய் வேலை செய்து உயர் நிலையை அடைந்தவர்கள் பற்றி அடுத்த வாரம் கூறுகிறேன்...//

    காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தம்பி நிஜாம் அவர்களே

      இன்னும் ..பல விசயங்கள் பகிர்வோம்

      Delete
  2. Still Some of them with this behaviour. They dont understand their status. Krishnan, Maldives.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ..கருத்திற்கும் நன்றி

      மனிதர்கள் பல விதம் ..அவர்களின் நடை முறைகளும்

      பலவிதம் இன்னும் பல விசயங்கள் பகிர்ந்து கொள்வோம்

      Delete
  3. அமீரக துயரங்களை எழுத்தில் கொண்டு வரும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நானும் சுமார் பதினைந்து வருடங்கள் அமீரகத்தில் வசித்துள்ளேன்.
    எவ்வளோ கண்ணீர் கதைகளை கேட்டு இருக்கிறேன், பார்த்திருக்கிறேன். அதில் உருவானதுதான் இது
    http://nunippul.blogspot.in/2009/12/blog-post_17.html
    இப்பொழுது தாயகம் திரும்பி ஐந்து வருடங்கள் ஆகின்றது. முறை சாரா பணியாளர்களை மையப்படுத்தி நாவல் ஒன்று எழுதும் முயற்சியில்
    ஈடுப்பட்டுள்ளேன்.
    உங்கள் பணியைத் தொடர வாழ்த்தும்,
    உஷா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

      Delete
  4. சுவராசியமாக போகும் உங்களின் வளைகுடா வாழ்க்கை த்தொடார் அடுத்தடுத்த வாரங்களில் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று எதிர் பார்க்க வைக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஊக்கமான கருத்திற்கு நன்றி

      Delete
  5. மலரும் நினைவுகள்.

    வாழ்க ! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தங்களின் வாழ்த்துக்கு ..நன்றி

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers