.

Pages

Thursday, August 1, 2013

ஒரு ஹதீதை எப்படி அணுகவேண்டும் ?

ஒரு ஹதீதை நாம் அறிவைக்கொண்டு பார்க்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள் சிலர்.

ஆனால் குர்-ஆனை நீங்கள் அறிவைக் கொண்டு பார்க்கலாம்.

இஸ்லாம் அறிவியல் பூர்வமான ஓர் மார்க்கம். அதனுள் மூட நம்பிக்கைகளுக்கு இடமில்லை.

மூடநம்பிக்கைகளே இல்லாத அற்புதமான மார்க்கம் என்ற பெருமையை உடையது இஸ்லாம்.

உலகின் தலை சிறந்த அறிஞர்கள்கூட (அறிஞர் பெர்னாட்சா போல) குர்-ஆனை வாசித்துத்தான் இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம் என்று சொன்னார்கள்.

குர்-ஆன் அப்படிப்பட்ட ஓர் புனித நூல், புரட்சி நூல், உண்மையின் மையம்.

பலகீனமான ஹதீதுகளை ஏற்றுக்கொள்வதால் நீங்கள் இஸ்லாத்தின் உயர்வுக்கு பங்கம் விளைவிக்கிறீர்கள்.

பலகீனமான ஹதீதுகள் உண்டு.

பலகீனமான இறைவசனம் ஏதேனும் ஒன்று உண்டா ? 

குர்-ஆன் அப்படியே உண்மையின் இழைகளால் கட்டப்பட்டது.

ஹதீதுகள் பொய்யர்கள் சூழ்ந்து செய்த சதியால் கலப்படம் செய்யப்பட்டது.

ஹதீதுகளில் பலகீனமானவற்றைக் களைவது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமை.

அன்று இயன்றவரை அறிஞர்கள் களைந்தார்கள்.

ஹதீதுகளைப் பார்வை இட்டு ஆயிரம் ஹதீதுகளுக்கு ஒன்றிரண்டைத்தான் ஏற்புடையது என்றார்கள்.

குர்-ஆனில் ஏதேனும் ஒரு இறைவசனத்தை உங்களால் நீக்க முடியுமா ? 

அப்படி ஓர் குழு அமைக்கப்பட்டு குர்-ஆன் வசனங்கள் ஏதேனும் நீக்கப்பட்டதா ?

ஏற்புடைய ஹதீதுகள் என்று பல லட்சம் ஹதீகளில் இருந்து சில வற்றை மட்டுமே தொகுத்தார்கள். ஏன் என்று சிந்திக்கவேண்டும்.

ஏற்புடைய குர்-ஆன் வசனம் என்று பல ஆயிரம் இறைவசனங்களை நீக்கி சிலவற்றை மட்டும் தேர்வு செய்து எந்த அறிஞர் குழுவாவது தொகுத்ததா ?

ஒரு சொல்லும் ஓர் எழுத்தும் மாற்றாமல் நபித் தோழர்களின் நினைவாற்றல்களிலிருந்தும், எழுதி வைக்கப்பட்ட அனைத்து வகை ஏடுகளிலிருந்தும் குர்-ஆனை நூலாக்கினார்கள்.

ஹதீதுகள் அப்படியா ?

ஹதீதுகளின் வரலாற்றை வாசியுங்கள்
http://anbudanislam2012.blogspot.ca/2012/10/blog-post_3595.html

அறிவுடைய ஒவ்வொருவருக்கும் 
மேலான அறிவுடைய ஒருவன் 
இருக்கிறான் (குர்-ஆன் 12:76)
அன்புடன் புகாரி

9 comments:

  1. இஸ்லாமிய நடை முறைக்கு

    முரணான கருத்து

    ReplyDelete
  2. அன்பின் அதிரை சித்திக்,

    அதை நீங்கள் முடிவு செய்யக் கூடாது. குர்-ஆன் தான் பதில் சொல்ல வேண்டும்.

    இது முழுமை பெற்றது என்று குர்-ஆனை இறைவன் சொல்கிறான். அவன் சொல் கேட்போமே?

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  3. நான் ஒரு நாத்திகன், ஆயினும் நான் வாசித்த வரை பெருமளவில் குரான் வசனங்களில் குழப்பங்கள் இல்லை, ஆனால் சிக்கல்கள், குழப்பங்கள் பல அதீத்கள், சரியா சட்டங்களில் தான் உள்ளன. மீண்டும் குரானை வாசிக்கத் தூண்டுகின்றது உங்கள் பதிவு. ! :)

    ReplyDelete
    Replies
    1. நிரஞ்சன் தம்பி,

      குர்-ஆனை அமைதியாக நிதானமாக வாசியுங்கள். வேறு எதையும் வாசிக்காதீர்கள். குர்-ஆனை மட்டும் முழுவதும் வாசித்து முடித்துவிடுங்கள். உங்கள் எண்ணங்கள் மாறலாம்.

      Delete
  4. அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.

    இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பது ஆகும்.

    ReplyDelete
  5. \\அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம்.\\

    இதைத்தான் முன்னர் யான் தெரிவித்தேன்.

    எனவே, மீண்டும் விவாத மேடை உண்டாகி விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு விட்டது!

    மார்க்க/ மத சம்பந்தமான ஆக்கங்கள் விவாதத்தை நீட்டிக் கொண்டுச் செல்லும் என்பதால் ”இத்தளத்தில் இனி அவைகள் இடம் பெறா.” என்று வாக்குறுதி அளித்து விட்டு மீண்டும் தொடர்வது ஏனோ?

    அன்பின் நிர்வாகி சேக்கனா நிஜாம் அவர்களே!

    என்னாச்சு உங்களின் முந்தைய ஒப்புதல்?

    இனிமேல், இத்தளத்தில் என் ஆக்கங்கள் தொடர்வதை நிறுத்திக் கொள்கிறேன்.

    ம அ ஸலாம்

    ReplyDelete
  6. அன்பின் அதிரைவாசிகளே!!!

    அல் குர் ஆனுக்கும் நபி(ஸல்) அவர்களின் ஹதிஸ்களுக்கும் உள்ள தொடர்பை அரியாமல் இது போன்ற வழிகேடர்கள் எமது சமுகத்தை வழிகேடுக்க முயல்கின்றனர்...

    இது போன்று அல் குர் ஆனை ஏற்று ஹதிஸ்களை மறுத்து காஃபிர் ஆகிவிட்டவர்னின் எழுத்துக்கள் எமது சமுகத்துக்கு உள்ளே வருவதை அனுப்பதிப்து மிக பெறிய தவறாகும்.

    மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்’ (அல்குர்ஆன் 16:44)

    ‘ஸுன்னா’ என்பது அல்குர்ஆனுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியது என்ற வகையில் அல்குர்ஆனோடு ஹதிஸை இணைந்து விளங்க வேண்டும்.இஸ்லாமிய மார்க்கத்தில் மூன்று முறைகளில் ஸுன்னாவின் பயன்பாடு அமைந்து காணப்படும்.

    01. திருமறைக்குர்ஆனில் இடம்பெறுகின்ற அம்சங்களை உறுதி செய்வதாக அமைந்திருத்தல்.

    அதாவது அல்குர்ஆன் கூறுகின்ற குறித்ததொரு விடயத்தை ஸுன்னாவும் வேறு விதத்தில் எடுத்துச் சொல்வதாகும். அந்த வகையில் அல்குர்ஆன் ‘தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்’ (அல்குர்ஆன் 02:43),

    ‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற் காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமை யாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.’ (அல்குர்ஆன் 02:183)

    மற்றும் ‘அந்த ஆலயத்தில் அழ்ழாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.’ (அல்குர்ஆன் 03:97) என்றெல்லாம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற விடயங்களை நபிமொழியும் பின்வருமாறு கூறுகின்றது. ‘அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப் பட்டுள்ளது.

    ReplyDelete
  7. 1. அழ்ழாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.

    2. தொழுகையை நிலைநிறுத்துவது.
    3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.
    4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.
    5. ரமளானில் நோன்பு நோற்பது ஆகியவையாகும்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-08)

    அதே போன்று ‘நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள்தாம்.’ (அல்குர்ஆன் 49:10) என திருமறைக் குர்ஆன் குறிப்பிட, நபிமொழியும் ‘ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-5010) எனக் கூறுகின்றது.

    அல்லாஹ்வை அஞ்சிக்குகொள்ளுங்கள் இது போன்ற ஹதிஸ்களை நிறாகரிக்கும் கூட்டத்தை எமது சமுகத்தில் உள்ள அனுமதித்து இஸ்லாத்தை விட்டு வெளியெருவதுதை விட்டும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

    அல்லாஹ் அஃலம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers