.

Pages

Friday, August 9, 2013

கவித்தீபத்தின் தேடல்...

தண்ணீர் தாகத்தைத் தேடும்
தாகம் தண்ணீரைத் தேடும்

உணவு பசியைத் தேடும்
பசி உணவைத் தேடும்

காற்று சுவாசத்தைத் தேடும்
சுவாசம் காற்றைத் தேடும்

நிலம் மழையைத் தேடும்
மழை நிலத்தைத் தேடும்

வானம் நிலவைத் தேடும்
நிலவு வானத்தைத் தேடும்

நெருப்பு அடுப்பைத் தேடும்
அடுப்பு நெருப்பைத் தேடும்

மூளைக் கல்வியைத் தேடும்
கல்வி மூளையைத் தேடும்

ஞானம் தேடலைத் தேடும்
தேடல் ஞானத்தைத் தேடும்

பசி வயிற்றைத் தேடும்
வயிறு பசியைத் தேடும்

வாழ்க்கை சுகத்தைத் தேடும்
சுகம் வாழ்க்கையைத் தேடும்

நோய் நிவாரணத்தைத் தேடும்
நிவாரணம் நோயைத் தேடும்

 இரணம் மனிதனைத் தேடும்
மனிதன் இரணத்தைத் தேடுகின்றான்

மண் மனிதனைத் தேடும்
மனிதன் மண்ணைத் தேடுகின்றான்

நீர்க்குமிழியை நீர் தேடும்
நீரை நீர்க்குமிழி தேடும்
நீருக்குள் நீர்க்குமிழ்யும் உண்டு
நீர்க்குமிழிக்குள் நீரும் உண்டு

வரலாறு கூறும்
வள்ளல் நபி(ஸல்) வாழ்வா ?

வள்ளல் நபி(ஸல்) கூறும்
வாழ்வியல் வரலாறா ?

தேடுங்கள் கிடைக்கும்
தட்டுங்கள் திறக்கும் !
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 08-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. 

6 comments:

  1. வாசிக்க வாசிக்க இனிமை தருகிறது கவிதை !

    தேட்டம் வாழ்வில் அவசியம் ! பிறருக்கு நன்மை தருவதாக அமைத்துக்கொள்வோம்.

    கவிக்குறளுக்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பின் தம்பி சேக்கனா நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும்
      உங்கட்கு ஈத் வாழ்த்தை அலைபேசியில் சொல்ல அழைத்த வேளையில் உங்களின் அழைப்புக் கிட்டாவிட்டாலும், அடுத்த நாள் கிட்டியதும் ஓர் அறிவிப்பைச் சொன்னேன்; மறந்து விட்டீர்களா/

      ஆம். என் கவிதை இலண்டன் வானொலியில் ஒலிபரப்பபட்டதன் யூடியூப் இணைப்புக் கிட்டவில்லை; அன்புச் சகோதரி ஷைஃபா அவர்கள் ஈத் விடுப்பில் சென்றுள்ளதால் தொடர்பில்லை. எனவே, நீங்கள் அந்த வாசகத்தை “இதோ..: என்பதை எடுத்து விடச் சொன்னேன்.

      ஆம், என் தேடல் என்னும் கவிதையை இணைப்பில் தேடினேன்; அங்கும் என் தேடலுக்கு விடை கிட்டவில்லை!

      உங்களின் வாழ்த்துக்கு உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
  2. தேடலுக்கு ..

    என்றும் விடை உண்டு ..

    கவி தீபம் ..கவி என்றும் சுவை

    ReplyDelete
    Replies
    1. வாழும் வரை தேடிக் கொண்டே இருப்போம்; ஆயினும் வாழ்வு இதுதான் என்று அறியு முன்பு விடை பெறுவோம்; இதுவே விடையாகும்; விடைபெறுதல் தான் விடை பெறுதல் இத்தேடல் என்னும் விடையறியா வினாவுக்கு!

      இனிய சுவைஞரான உங்கட்கு என் இனிய வாழ்த்தும் நன்றிகளும்.

      Delete
  3. கவித்தீபத்தின் தேடல்கள் யாவும் சிந்திக்கவைக்கும் தேடல்.தேடலுக்கு முடிவில்லை. இவ்வுலகில் பிறந்த மனிதன் ஏதாவது ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறான்.எதிலும் முழுமை பெறாமல் மரணிக்கின்றான்.

    வாழ்த்துக்கள் கவித்தீபம் அவர்களே.!

    ReplyDelete
  4. \\வாழும் வரை தேடிக் கொண்டே இருப்போம்; ஆயினும் வாழ்வு இதுதான் என்று அறியு முன்பு விடை பெறுவோம்; இதுவே விடையாகும்; விடைபெறுதல் தான் விடை பெறுதல் இத்தேடல் என்னும் விடையறியா வினாவுக்கு!\\

    இவ்விடையை மேலுள்ள பின்னூட்டத்தில் அதிரை சித்திக் அவர்கட்குக் கொடுத்து விட்டுக் கீழுள்ள உங்கள் கருத்தை நோக்கினேன்; வியந்தேன்! ஆம். நம்மிருவரின் எண்ணமும் எழுத்தும் ஒன்றின; நம் உள்ளங்களைப் போலவே.

    உங்களின் ஆர்வமும் பாசமும் கலந்த இனிய ஈத் பெருநாளன்று அலைபேசி ஊடாக அலைஅலையாய்ப் பேசிய தருணம் இன்னும் என் செவிகளில் தேனூறும்.

    உங்களின் வாழ்த்துக்கு உளம்நிறைவான நன்றிகள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers