.

Pages

Thursday, September 26, 2013

வழி விடுங்க... வழி விடுங்க... ஆம்புலன்ஸ்சுக்கு !

ஓங்கி ஒலி எழுப்பிக்கொண்டு விரைவாக சென்றுகொண்டிருக்கும் ஒரு ஆம்புலன்சை எங்கேயாவது நாம் பார்த்தவுடன் முதலில் நம் மனதில் ஒரு வித அனுதாபம் ஏற்பட்டு பிறகு கடந்து செல்கின்ற அந்த வாகனத்திற்கு வழி விடுங்க... வழி விடுங்க... என சொல்கின்ற அளவுக்கு மனித நேயம் நம் அனைவரிடத்திலும் வளர்ந்து காணப்படும்.

இதற்கான காரணம் இல்லாமல் இல்லை மனித வாழ்வில் இதன் பயன்பாடு எண்ணிலடங்கா ஒருவருக்கு ஏற்படும் விபத்தாகட்டும், அவசர சிகிசையாகட்டும், இறப்புகள், பிரசவம் போன்ற மனித வாழ்வாதார சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு முக்கிய பங்களிப்பது ஆம்புலன்ஸ் என்பது நாம் மறுக்க இயலாது. எப்போது, எங்கே, யாருக்கு இதன் தேவை என்பதையும் யாராலும் கணிக்க முடியாவிட்டாலும் இதன் தேவையை எனக்கு தேவையில்லை என்று ஒதுக்கித் தள்ள எந்த கொம்பனாலும் முடியாது. அவசர காலத்தில் இந்த வாகனத்தை பயன்படுத்தியோரிடம் கேட்டால் இதன் அருமை நமக்கு தெள்ளத்தெளிவாக அறிய முடியும்.

நம் அலைபேசியில் சேமித்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு எண் என்றால் அது அவசர காலக் கட்டங்களில் நமக்கு விரைவாக உதவ முன் வரும் ஆம்புலன்ஸின் தொடர்பு எண்கள் மட்டுமே என்றால் மிகையல்ல.

ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான். அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயலை சென்றடைகிறது. அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும். அதுபோல சமூகத்தில் நன்மக்கள் செய்கின்ற இது போன்ற சில சேவைகள் பலருக்கு அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பயனை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை !

சேவையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் ஆம்புலன்ஸின் எண்ணிக்கையை உயர்த்தி இயற்கை சீற்றத்திலிருந்து அவற்றை பாதுகாப்போம் என்றென்றும்...

வாழ்க ஆம்புலன்ஸ் ! வளர்க ஆம்புலன்ஸ்ஸின் சேவைகள் !

சேக்கனா M. நிஜாம்

7 comments:

  1. வாழ்க ஆம்புலன்ஸ் ! வளர்க ஆம்புலன்ஸ்ஸின் சேவைகள் !

    ReplyDelete
  2. சேக்கனா நிஜாம் என்னும் விழிப்புணர்வு வித்தகரின் சேவைக்குப் பாராட்டுகள்!

    ReplyDelete
  3. ஆம்புலன்சின் சேவை அனைவருக்கும் மகத்தான தேவை. ஆம்புலன்சின் அவசியத்தை அனைவருக்கும் நினைவூட்டி அறியத்தந்த சகோதரர் சேக்கனா நிஜாம் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்களது விழிப்புணர்வு ஆக்கங்களும் தளத்தில் வர வேண்டும்.

    ReplyDelete
  4. மனிதனின் பரிணாம வளர்ச்சி பன்மடங்கு பெருகிவருகிறது எல்லோருக்கும் அவசரம் வழியில் நடக்கும் விபத்துக்களை கூட கண்டுகொள்ளாமல் போகும் சிலர் கண்காட்சி பார்ப்பதுபோல் வேடிக்கை பார்க்கும் கூடங்கலும் உண்டு இவைகளுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் சேவை பாராட்டுதலுக்குரியது அவசரத்திற்கு உதுவுவதுதான் சரியான உதவியாகும்

    ReplyDelete
  5. ஆம்புலன்ஸ் தேவையை எனக்கும் அடிபட்டு சுயநினைவில்லாமல் இருந்த போது அருகில் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் 108க்கு அழைத்து மருத்துவ மனைக்கு அழைத்து சென்றபோதே முழுமையாக உணர்ந்தேன். அவரசத்திற்கு உதவும் வாகனத்திற்கு வழி விடுவோம். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. அவசர உதவிக்கு தேவை அதிரைக்கு மிக தேவை ஏன் என்றால் அடிக்கடி ஈ. சி. ஆர் சாலையில் அதிகமாக நடக்கின்றது விபத்து.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers