kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, December 5, 2013
[ 12 ] அறிவுத்தேன் [ அருவே உருவில் ]
கண்ணது பார்வை
உன்னது பார்வை
கண்ணைக் காண
கண்ணுரு தெரியும் !
காணும் கண் காணும் போது மாட்டுமே தெரிவதெங்கனம் ?
ஒருவர் அவர் பேச்சிலே அவர் இலயித்து; உருசித்து மிக அற்புதமாக அழகியதோர் சொற்பொழிவைத் தந்துக் கொண்டிருப்பார். நாம் மெய்மறந்து வேறொன்றும் தன் பார்வையில் தெரியாது; சிந்திக்காது அப்பேச்சில் கட்டுண்டோர் நிலையில் இருந்திருப்போம்.
பேசுபவர் அந்நிலையில் அவர் தான் பேசும் அக்கருத்தில் அவர் இலயித்து தன் வாய்ப் புலன் மூலம் நாம் பேசுகிறோம் என்றும், கேட்பவர்கள் இரசித்து மயங்கி அவர் சொற்பொழிவைத் தங்கள் செவிப் புலன்கள் மூலம் கேட்கிறோம் என்றும் யாரும் தனித்துப் பிரித்து உணர்வதும் இல்லை; புரிவதும் இல்லை. மாறாக தான் பேசுகிறோம் என்ற தன் வாய்ப் புலன் உரிமை நினைவு அற்று அவர் பேசுவார், கேட்பவர்களும் தங்கள் செவிப் புலன் உரிமை நினைவு அற்றும் கேட்ப்பார்கள்.
அந்நிலையில்தான் உயர்வான நல்லப் பேச்சுகளும் வரும். கேட்பவரும் தன்னை மறந்துக் கவனிப்பார்; இரசிப்பார், அப்பொழுது ஒரு தனி இன்பமும்; முழூ கவனமும் உண்டாகும். சொல்பவரும், கேட்பவரும் அக்கருத்தின் ஒன்றிலேயே ஒன்றி இருப்பாராகள்.
அருவி ஓர் இடத்தில் உற்பத்தியாகி மறு இடத்திற்கு; இடங்களுக்கு நீர் ஓடிக் கொண்டிருக்கும். அதுபோல் சொற்பொழிவின் கருத்தானது ஒருவரிலிருந்து பலருக்குச் செல்கிறது. இது பூரண கவனத்தில் ஒன்றினுள் ஒன்றின் செயல் போல் நடக்கின்றது. தனித்த உணர்வுகள் திரும்பியவுடன் இருமையோ; பலமையோத் தெரியும். அதாவது அறிவு மயக்கத்தில் உணர்வால் இருமையாக; பலமையாக தெரியும்.
மேலும் ஒன்றினுள் ஒன்றின் செயல் என்பது, நாம் நம் தனிமையில் சிந்திக்கும் பொழுது நம்மில் ஓர் எண்ணம் உண்டாகி நாமே அதில் உள்ள உண்மைகளை இரசிப்போம்; விரும்புவோம். இது ஒரு தெளிவான நிலை. அதுபோல் பரிபூரண கவனத்தில் ஒருவர் பேச மற்றொருவர் கேட்கிறார்.
இங்கு பேசுபவரும், கேட்பவரும் அந்தச் சொற்பொழிவின் அச்செயல் முடிந்தவுடன் அந்தத் தெளிவான நிலையிலிருந்து, தாங்கள் தங்களின் தனித்த உண்டாக்கிக் கொண்ட சுபாவச் சுயவுனர்வுக்குத் திரும்பும் நிலைத் தானாக ஏற்பட்டுத் திரும்புவார்கள். அப்பொழுதுக் கருத்தைப் பேசிய அவர் தன் வாய்ப் பற்றியோ அல்லது கருத்தைக் கேட்ட இவர்கள் தங்கள் செவிப் பற்றியோ தங்களின் கவனத்தைத் திருப்ப அப்புலன்கள் உணரப்படும். பின்பு அப்புலன்கள் தெரியும்.
ஒருவர் அவர் தன்னில் ஓர் எண்ணம் உண்டாகிச் சிலத் தெளிவுகளைத் தந்து அவ்வெண்ணத்தின் குணம் அவர் தன்னில் அதிகமாக விரும்பப்பட்டால் அக்குனமாகவே அவ்வெண்ணம் உண்டாகிய அவர் இருப்பார். அருவே உருவில்.
அதுபோல் ஒர் உள்ளத்தில் ஓர் எண்ணம் உருவாகி பல உள்ளங்களுக்குச் செல்கிறது. ஒர் உள்ளத்தில் உருவாகிய ஓர் எண்ணம் அவ்வுள்ளத்திலும் குணம் வெளிப்பட்டு அவ்வுள்ளம் அக்குணமாகவும், பல உள்ளங்களில் கேட்கப்பட்டு, அக்கருத்தின் குணம் அவ்வுள்ளங்களில் பதிந்து அக்குணம் வலுப்பட்டு பின் அவ்வுள்ளங்களிலும் அக்குணம் ஆகி நிற்கும். அருவே உருவில்.
மாம்பழத்தின் உருசி அலாதியானது. மாம்பலத்தில் அதன் சுவை தனித்து எங்கும் இருப்பதில்லை. அந்த சுவையே மாம்பழமாக இருக்கின்றது. மாமபலச் சுவை உருவமற்றது, பார்க்கமுடியாது. ஆனால் மாம்பழ உருவில் இருக்கின்றது. அருவே உருவில்.
தங்கத்தில் மோதிரம். தங்க மோதிரம். தங்கமே மோதிரம். ஆனாலும் தங்கமெல்லாம் மோதிரம் அல்ல என்பதிலும் நழுவிடக்கூடாது. அறிவின் தெளிவின் நிலைக் கேற்ப உண்மைகள் வெளிப்படும்.
உங்களில் கண். கண் இல்லாமல் நீங்கள் பார்க்க முடியாது. நீங்கள் இல்லாமலும் கண் இல்லை, அது தனித்து இயங்காது. நீங்கள் என்பது கண்ணும் சேர்ந்தும்தான்.
தனித்து கண்ணைக் கவணித்தாலே கண் உரு தெரியும். அருவில் உரு.
கண் காணாது. நீங்கள்தான் காண்கிறீர். அப்பொழுது உங்களில் கண் உருவம் தனித்து இல்லாமலாகிவிட்டது. கண்ணுடைய பார்க்கும் தத்துவம் உங்கள் உருவில் உள்ளது. பார்க்கும் ததுவமாகவே நீங்கள் இருப்பீர்கள். அருவே உருவில்.
இங்கு முக்கியமாக நாம் அறிந்துக் கொள்வது என்னவென்றால் அரு என்ற ஒன்றுதான் அனைத்துமாகி பல செயலானச் செயலாக ஒரே செயல் தன்னுள் நிகழ்த்துகின்றது, நிகழ்கின்றது. அருவே உருவில்.
ஒன்றாய் உணர்ந்தால்
உருவம் இல்லை !
பலதாய் உணர்ந்தால்
உருவங்க ளுண்டாம் !
உணர்வில் உருவங்கள் எங்கனம் ?

(தொடரும்)
நபிதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
Very interesting to read...
ReplyDeleteThanks brother Nabithass for your wonderful subject
Thank you. And I like you to be wonderful of wonderful.
Deleteநெஞ்சிலெழு மையமதை நீக்கும் நபிதாஸா
ReplyDeleteநெஞ்மதிலே தேன்வழிய ஞானந் தருமாசான்
என்னைப்பு கழவேண்டாம், ஏற்றம் பெறவேண்டும்
ReplyDeleteஎன்றுதானா ழ(ச்)சிந்தித்து ஏற்றும் பொருள்பெறுக.
எண்ணத்தின் பார்வை
ReplyDeleteதிண்ணமாய் இருப்பின்
கண்ணுக்கு ஒளி நின்றும்
கருத்துக்கள் மாறுபடா
மண்ணுக்குள் புதையுமுன்னே
விண்மீனாய் ஒளிர்தந்து
எண்ணத்திரையில்
வண்ண நினைவாய்
உன்னகத்தும் உயிர்வாழும்
கண்ணகத்தின் விழிப்பார்வை
எண்ணமதில் சீர்மை ஏற்றிட
ReplyDeleteவண்ணமான வாழ்வு வாழ
தன்னிலுமே தப்பா(து) தன்னில்
நன்தலைவன் தெளிவில் நாடு
மண்ணுக்குள் போகும் முன்னே
வேண்டும்நல் உன்னில் வெண்மை
பின்னால்நீ இன்பம் பேண
தன்னிலேநல் பாதை தாங்கு.
சொல்லும்க ருத்தில் சூழ
நல்லகேள்வி கேள நாடு
தருணம்வி டாமல் தட்டு
தருவதைநி தானித் தாளு.
அந்நிலையில்தான் உயர்வான நல்லப் பேச்சுகளும் வரும். கேட்பவரும் தன்னை மறந்துக் கவனிப்பார்; இரசிப்பார், அப்பொழுது ஒரு தனி இன்பமும்; முழூ கவனமும் உண்டாகும். சொல்பவரும், கேட்பவரும் அக்கருத்தின் ஒன்றிலேயே ஒன்றி இருப்பாராக///////
ReplyDeleteஉங்கள் கருத்துப்படியே சில சாமியார்களும் கேட்பவரை மெய்மரக்கச்செய்த்து அவர்களின் ஆழ் மனதில் புகுந்து தன் வசப்படுத்தி தனக்கு சாதகமாய் சில காரியங்களையும் செய்கின்றனர்
மற்றவர்களின் கருத்துக்கும் பேச்சுக்கும் அடிமையாவது மிக ஆபத்தான ஒன்று
நல்லது அன்பரே. அது ஹிப்னாடிசம் என்னும் ஒரு செயல். அதில் தன்னையே இழந்து அடுத்தவர் ஆளுமையில் இருக்கும் நிலை. அதை இங்கு ஞாபகப் படுத்தியதும் நன்றே.
ReplyDeleteஒரு நபர் ஒன்றில் முழுகவனத்தில் இருக்கும் போது நாம் இடையில் வந்து ஏதாவது சொன்னால் அவர் உடனே இடையில் வந்தவரின் சொல்லை என்ன சொன்னீர்கள் என்று கேட்ப்பார். இங்கு தன்னை மறந்த நிலை என்றால் தன்னை இழந்த நிலை அல்ல. தன்னின் மற்றவைகள் ஞாபக நிலை மறதியில் தான் கொண்ட கருத்தில் இருக்கும் நிலை. இங்கு தன் சுயம் அழியாது. பின்பு கருத்தை உள் வாங்கிய நபர் சிந்தித்துதான் நல்லது என்றால் முழுமையாக ஏற்ற நடப்பார். மனம் ஏற்றால் தான் தன்னில் குணமாகும்.
ஆழ் மனதில் புகுதல் என்பது முழு சம்மதம் விருப்பம் இல்லாமல் முடியாது.
நன்றி !
மேலும் மெய்மறக்கச் செய்வது என்பதே ஹிப்னாட்டிசத்தில் மட்டும்தான் அறிந்தவரையில் முடியும்.
Delete//
இங்கு பேசுபவரும், கேட்பவரும் அந்தச் சொற்பொழிவின் அச்செயல் முடிந்தவுடன் அந்தத் தெளிவான நிலையிலிருந்து, தாங்கள் தங்களின் தனித்த உண்டாக்கிக் கொண்ட சுபாவச் சுயவுனர்வுக்குத் திரும்பும் நிலைத் தானாக ஏற்பட்டுத் திரும்புவார்கள். அப்பொழுதுக் கருத்தைப் பேசிய அவர் தன் வாய்ப் பற்றியோ அல்லது கருத்தைக் கேட்ட இவர்கள் தங்கள் செவிப் பற்றியோ தங்களின் கவனத்தைத் திருப்ப அப்புலன்கள் உணரப்படும். பின்பு அப்புலன்கள் தெரியும்.
//
மீண்டும் கவனிக்க......
Delete//
பேசுபவர் அந்நிலையில் அவர் தான் பேசும் அக்கருத்தில் அவர் இலயித்து தன் வாய்ப் புலன் மூலம் நாம் பேசுகிறோம் என்றும், கேட்பவர்கள் இரசித்து மயங்கி அவர் சொற்பொழிவைத் தங்கள் செவிப் புலன்கள் மூலம் கேட்கிறோம் என்றும் யாரும் தனித்துப் பிரித்து உணர்வதும் இல்லை; புரிவதும் இல்லை. மாறாக தான் பேசுகிறோம் என்ற தன் வாய்ப் புலன் உரிமை நினைவு அற்று அவர் பேசுவார், கேட்பவர்களும் தங்கள் செவிப் புலன் உரிமை நினைவு அற்றும் கேட்ப்பார்கள்.
அந்நிலையில்தான் உயர்வான நல்லப் பேச்சுகளும் வரும். கேட்பவரும் தன்னை மறந்துக் கவனிப்பார்; இரசிப்பார், அப்பொழுது ஒரு தனி இன்பமும்; முழூ கவனமும் உண்டாகும். சொல்பவரும், கேட்பவரும் அக்கருத்தின் ஒன்றிலேயே ஒன்றி இருப்பாராகள்.
//
///
உங்கள் கருத்துப்படியே சில சாமியார்களும் கேட்பவரை மெய்மரக்கச்செய்து ///
இங்கு மெய் மறக்கச் செய்து.... என்பது ஒரு தனி நோக்கம் இருப்பது தெரிகிறது. *அவர் மெய் மறக்கச் செய்கிறார்.*
சொற்பொழிவு என்பது திறந்த இடத்தில்.
எல்லாமே நாம் காணும் நோக்கத்திர்க்கேற்ப புரியும்.
////
அவர்களின் ஆழ் மனதில் புகுந்து தன் வசப்படுத்தி தனக்கு சாதகமாய் சில காரியங்களையும் செய்கின்றனர்.
///
இந்த கருத்துப்படி ஆக்கத்தில் இல்லை.
///
மற்றவர்களின் கருத்துக்கும் பேச்சுக்கும் அடிமையாவது மிக ஆபத்தான ஒன்று
///
எதற்கு அடிமை ஆகவேண்டும் ?
ஆக்கத்தில் அடிமைப் படுத்துதல் இல்லை. சுய சுதந்திரம் தான் இருக்கு.
கேள்விகளை இரசிக்கின்றேன்.
நன்றி !
நல்ல விளக்கம் தந்தீர் அறிஞர் அண்ணா மௌலானா.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் டாக்டர் ஜாகிர் நாயக் போன்றோர் உண்மைகளை சொன்னாலும்! அவர்களின் பேச்சு திறந்தான் மக்களை கவர்ந்தன ஒரு வேலை இடையில் பெய்யை சேர்த்தாலும்! அவர்களின் பேச்சுத்திறன் மக்களை நம்ப வைத்துவிடும் காரணம் அவர்களின் பேச்சாற்றல்! உண்மைதானே?
ReplyDeleteபேச்சாற்றல் அதனால் பொய்மை அதனை உண்மையாக திரித்தாலும் பொய் பொய்தான். ஏனென்றால் தாங்கள் போன்றோர் இடையில் பொய்யை சேர்த்தாலும் என்று எழுதும்போது, தாங்கள் போன்றோர் அவர்கள் பொய் பேசுகிறார்கள், ஆனால் சமாளிக்கின்றார்கள் என்பதை மனதில் இருத்தி வாய் பொத்தினாலும் பொய் பொய்தானே.
ReplyDeleteசிலசமயம் உணவு ஜீரனிக்காவிட்டால் உணைவை அவர் அறிந்திருந்தால் குடலை சரிபார்க்கவேண்டும் என்றுதான் டாக்டர் சொல்வார். ஆனால் அவர் உணவை குறை கூறமாட்டார்.
நன்றி !