.

Pages

Saturday, January 11, 2014

இவனா ஏழை !?

வண்ணமய உலகில்
வாடிடும் ஏழை
கண்ணில் காணும் பொருளெல்லாம்
விலை சொல்லி மிரட்டுதய்யா

சொந்தங்களின் நேசமெல்லாம்
பண பலத்தை பார்க்குதய்யா
பக்கத்து வீட்டுக்காரனின் பாராமுகம்
பண பலத்தின் பின்னணியாம்

வயிராற சோறுன்ன வழியில்லை
வாயார உறவாடவும் வழியில்லை .
காய்ந்து போன வயிறும், மாய்ந்து போன உள்ளமும்
அன்றாட வாழ்க்கையாமே !

அந்த எழையது உள்ளத்தில்
விரக்தியான பார்வையாக
உலகமது தெரிந்ததுவே
பணத்தின் மீது ஆசை கொண்டான் ஏழையவன்

பம்பரமாய் சுற்றி வந்தான்
பல தொழில் பார்த்து பணமதுவை
சேர்த்து கொண்டான்
பக்குவமாய் அவனிடமும் பல சொத்து சேர்ந்ததுவே

குடிசையது
கோபுரமாய் மாறியது
பக்கத்தில் பல உறவு
பவ்வியமாய் நின்றிருந்தவேளையிலே.

ஏழையவன் மாறி போனான்
பக்கத்து வீட்டவலம்
இவன் கண்ணில் தெரியவில்லை
கவளம் உண்ணா காய்ந்த வயிறு
இவன் கண்ணில் தெரியவில்லை

உறவில்லா ஏழை மனம்
பதறுகின்ற பல நிகழ்வு
இவன் சமூகம் வரவில்லை
ஏனப்ப இந்த நிலை

பக்குவமாய் இவனிடத்தில்
நல் நண்பன் கூறிடவே
இவையெல்லாம் சிந்திக்க
எனக்கு நேரமில்லை எனக்கூறி மறுத்து விட்டான்
தர்மமில்லா இவனிடத்தில்பணமிருந்து என்ன பலன்
மனத்தால் இன்றுமவன் ஏழை என்றே
சொல்ல வேண்டும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

9 comments:

  1. போதுமென்ற குணமும்
    தாரள மனமுமே
    பணக்காரனாவான்
    என்பதனை சொல்லும்
    கவிதை

    ReplyDelete
  2. \\மனத்தால் இன்றுமவன் ஏழை என்றே
    சொல்ல வேண்டும்...\\

    மாடி வீட்டு ஏழை!

    அருமையான ஆழமான வரிகள்!

    ReplyDelete
  3. அவனா இவன்ங்கிற மாதிரி இருக்கு தலைப்பும் - கவிதையும்

    அருமை... அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. கூரைவீடு என்ன
    கோட்டைவீடு என்ன
    அடித்தளம் அமையாவிட்டால்
    அனைத்தும் வீணே !

    ஏழை என்ன
    பணக்காரன் என்ன
    ஏழையே பணக்காரனகியும் என்ன
    மனிதன் இல்லையே ?!

    ReplyDelete
  5. இன்றைய காலத்தின் நடைமுறை நிகழ்வை கவிவரிகளில் சொல்லியிருக்கிறீர்கள். பணத்தை மையமாக வைத்தே உறவுகளும் நட்புக்களும் போற்றப்படும் அவலநிலையை நினைக்கும் போது வேதனையாகத்தான் உள்ளது. இதே சாயலை ஒத்த ''உறவுகளை உதாசீனப்படுத்தாதீர்.!!!'' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை நான் எழுதி வைத்துள்ளேன் விரைவில் இத்தளத்தில் பார்க்கலாம்..

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    கூரைவீடு என்ன
    கோட்டைவீடு என்ன
    அடித்தளம் அமையாவிட்டால்
    அனைத்தும் வீணே !

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  7. கூரைவீடு என்ன
    கோட்டைவீடு என்ன
    அடித்தளம் அமையாவிட்டால்
    அனைத்தும் வீணே !

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers