.

Pages

Tuesday, January 7, 2014

மனம்

மனமென அறிவது யாது ?
.....மதியுடன் தெளிவிதுக் கேளு
உனதிலே பண்புகள் ஊன்றி
.....உண்மைகள் நிலைதனைக் காட்டும்

குணமதன் பண்பினில் கொண்டும்
.....கோலமாம் தன்னையேக் காட்டும்
இணங்கியக் குணங்களும் சேர்ந்தும்
.....இவனது வாழ்வுகள் போற்றும்

வலிமையின் உணர்வினில் திங்கள்
.....வடிவினில் பிளந்ததைக் கண்டார்
ஒலித்ததைக் கேட்டிட மாக்கள்
.....உயர்வினக் கோமகன் ஆனார்

கருணையின் கரத்தினால் கேட்க
.....கார்மழைக் கொட்டிடும் மிக்க
பொருளினில் பகைதனைக் காட்ட
.....புகைந்திடும் வெடித்திடும் ஒட்ட

குலுங்கியேச் சிரித்திடப் போகும்
......கொண்டிடும் வதைத்திடும் நோயும்
அலுத்திடும் பகைகளும் நீங்கும்
.....அன்பினை அளித்திட எங்கும்

இதயமுள் ஏகனை ஏற்க
.....எதுவுமே உன்னையே நோக்கும்
இதமுடன் இவைகளைக் கொண்டும்
.....இனிமையில் வாழ்வினைப் பேணும்

மனதினில் தோன்றிய யாவும்
.....மரித்திட வேண்டியேத் தீரும்
மனமது மட்டுமேத் தானும்
.....மாவுடன் நிலைத்திடும் என்றும்

பொறுமையில் இருந்திடும் உள்ளம்
.....புகுத்தினால் பலதையும் காட்டும்
அறுவடை செய்திடு இன்றே
.....அறிந்திடு மனதினை நன்றே.

நபிதாஸ்

6 comments:

  1. என்னதொரு ஒற்றுமை !

    நம்ம தளத்தின் பங்களிப்பாளர்கள் அனைவரும் சொல்லி வச்ச மாதிரி மனம் சம்பந்தப்பட்ட படைப்புகளை இந்த வாரம் முழுதும் படைத்துருக்கின்றனர்.

    ReplyDelete
  2. மனம் ஒருநிலைப்பட்டு நல்ல நிலைபாட்டில் வந்துள்ளது. அப்படியே நாம் அனைவர்களது மனத்தாலும் ஒருங்கிணைந்து இத்தளத்தை விழிப்புணர்வு ஆக்கத்தால் நிரம்பி வழியச் செய்வோமாக.!

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    அருமை... உண்மை....

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. மனதில் கவனத்தை செலுத்திய தங்கள் யாவருக்கும். நன்றி.

    ReplyDelete
  5. ஆரு மனமே ஆரு ஆண்டவன் கட்டளை ஆரு

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers