.

Pages

Monday, March 3, 2014

வேண்டாம் எழுபது இலட்சம் !?

அறிவிப்புக் கண்டேன் அழுதேன் - இன்று
..........அரசியல் செல்லும் வழிகள் பழுதே
அறிந்துதானே திட்டமும் தீட்டுகிறார் - அவலம்
.........அழிவுகள் வாழ வகுத்திட்டே காட்டுகிறார்

வருமிந்த பாராளு மன்றம் - தேர்தல்
..........வசதியில் வேட்பாளர் வீண்செலவு ஒன்றாம்
வருமானம் மாதாமா தத்தில் - கிடைப்பதோ
..........வசதிகளும் ஐம்பது ஆயிரம் நித்தம்

எழுநூறு ஆயிரம் கொண்டாம் - ஆட்சியர்
..........இவர்கள் செலவுகள் செய்திடிவீர் என்றார்
பழுதாகிப் போகியே மிஞ்சும் - இதனால்
..........பைகளில் கொட்டிடும் தீதான (இ)லஞ்சம்

மம்தா ஒருவர் எதிர்திட்டார் - மற்றவர்
..........மாற்றத்தை ஏற்றே மகிழ்வில் பதிங்கிட்டார்
சும்மா சமுதாயம் போகலாமோ - தீமைகள்
..........சூழ்ந்திட்டே நம்மை அழிக்காமல் போகாதே

அறிவோம் அதைவிட ஆகும் - நடைமுறையில்
..........அனுமதி அற்றச் செலவும் மிகுதம்
அறிந்தத் தவறுகள் நீக்கனும் - சான்றோர்
..........அறிவுடன் சட்டமும் தந்திட்டே காக்கனும்

முகமுடன் கொள்கையும் சின்னமும் - விளம்பரம்
..........முறையுடன் செய்ய பலலட்சம் என்பதேன் ?
அகமும் அறிவும் தெரிந்திடல் - கடினமாம்
..........அதனால் எதற்குப் பலலட்சம் புரிந்திடேன்

தொடக்கம் படியே முடிவு - அதனால்
.......... தொடக்கத்தில் நேர்வழிக் காட்டேன் முடிவாய்
மடக்க அடிபணிய வேண்டாம் - நிமிர்ந்தே
..........மாண்புடன் ஆழுமை தந்திட வேண்டும்

முதல்குற்றம் ஆனால் முடிவிலுமே !  - எப்படி ?
..........முன்னேறும் நம்நாடு வேண்டும் படிப்பினையே
விதவிதமா நல்வழிகள் உண்டு - அதனால்
..........விட்டிடுவீர் இந்த இழிவழிகள் கண்டு

குழுவுகள் திட்டமிட வேண்டும் - இனிமேல்
..........குறைகள் கலைந்தே வகுத்திடுவார் காண்போம்
எழுதிடும் சொந்தக் கவியிலும் - தூண்டிடும்
..........ஏற்றமான சிந்தனை இந்தப் புவியிலும்

தொலைக்காட்சி வானொலி இப்படியும் - இன்னும்
..........தோன்றிடு ஒர்மேடைத் தந்திடு அப்படியே
விலைகுறைந்த இவ்வழிகள் கொண்டிடு - அனைவரும்
..........விரைந்தே வாக்களிப்பார் வெற்றிகள் தந்திடு

குறைமதியில் கூறவில்லை ஆழப்பார் - சீர்திருத்தம்
..........குறிக்கோள் மனதினில் உள்ளதில் தேடிப்பார்
நிறைவுகளும் எல்லாத் துறைகளிலும் - என்னிலும்
..........நின்னிலும் எல்லோரில் வந்திடும் துரையேக்கேள்

ஆளும் அடாவடிகள் வேண்டாம் - அழிவுகள்
..........அள்ளித்தான் தந்திடும் வல்லோர்க்கும் என்றும்
நாளும் இதனில் கவனித்தே - மக்களுக்கு
..........நல்லது செய்திட ஆளக் கவனிப்பீர்

வீண்விறையம் செய்யாமல் நம்கலாம் - ஜனாதிபதி
..........வேலையும் சீர்மிகச் செய்திட்டார் நம்மிலாம்
காண்போமே அவ்விதமே நம்மிலேயும் - உயர்த்துவோம்
..........கவனமுடன் நம்நாட்டை வல்லரசாய் இம்மண்ணில்

நபிதாஸ்

10 comments:

  1. கற்றுக் கொடுத்ததைப் பற்றிப்---பிடித்துக்
    ,,,,,,காட்டிக் கொடுத்ததை நன்குபின் பற்றிக்
    குற்றம் குறையிலாச் சிந்து -- கண்டதும்
    .....குதித்தனன் ஆனந்தக் களிப்பில் மிதந்து

    ReplyDelete
    Replies
    1. மிதந்தே அதிரைநியுஸ் வந்த - உந்தன்
      ..........மீட்டிய பாடல் வழியிலிந்த சிந்து
      குதர்க்கம் புரிந்தேன் அரசியலில் - அதனால்
      ..........குடிமகனின் ஆனந்தக் (க)ளிப்பில் அரசியல்

      Delete
    2. ..........மீட்டியப் பாடல் வழியிலிந்தச் சிந்து

      Delete
  2. இது போன்று சமூக விழிப்புணர்வை தூண்டும் கவிதைகளை அவ்வபோது வழங்குங்கள். மக்கள் விழிப்படைய உதவும்.

    கவிதை தூள் :)

    ReplyDelete
    Replies
    1. கவிதைத் தூள்
      கள்ளமில்லாச் சொல்
      குவித்தேன் உள்
      குறைவில்லா மல்
      அவிழ்த்தேன் நல்
      அன்பைப் பல்
      செவியில் கேள்
      சீர்மிகு சொல்
      நன்றி நன்றி.

      Delete
  3. \\குதர்க்கம் புரிந்தேன் அரசியலில் - அதனால்
    ..........குடிமகனின் ஆனந்தக் (க)ளிப்பில் அரசியல் \\

    விளக்கம்?

    ReplyDelete
    Replies
    1. அங்கெ குதர்க்கம் நடக்கின்றதைப் புரிந்தேன் அரசியலில், அதனால் இந்தக் குடிமகனின் வேதனைகள், வேண்டுபவைகள் இந்த ஆனந்தக் களிப்பின் யாப்பின் மூலமாக அரசியல் சம்பந்தப்பட்டதை எழுதினேன்.

      Delete
  4. தற்போது நான் தாயகம் வந்திருப் பதால் எனது மடிக் கணினியில் இன்டர்நெட் வசதியில்லாமல் தமிழில் கருத்துக்கள் டைப் செய்து பதிய முடியவில்லை அத்துடன் எனது கவிதைகளும் கட்டுரைகளும் கொஞ்சம் தாமதமாக தளத்தில் இடம்பெறும் என்பதினை சக பங்களிப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு இதன்மூலம் தெரியப் படுத்திக் கொள்கிறேன். விரைவில் இணைப்பு பெற்று வருகை தருவேன்.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    அருமையான ஆக்கம்.
    நல்ல கருத்துகளோடு மிகவும் அழகாக இருக்கின்றது.

    உண்மையில் நினைத்து பார்த்தால் வேதனையாக இருக்கின்றது, அது என்ன தெரியுமா?

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  6. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    //உண்மையில் நினைத்து பார்த்தால் வேதனையாக இருக்கின்றது, அது என்ன தெரியுமா? //

    அதனை தாங்கள் விளக்கினால் இனிமை மிகும்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers