kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Wednesday, May 14, 2014
[ 4 ] மகவே கேள் ! அறிவுரை தொடர்கிறது...
குருவிற்கான சேவை :
உன் வாழ்வை துவங்க நீ சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்க நீ கற்றவனாக வளம்வர வேண்டும். இதனை நன்கு உணர வேண்டும். பண்டை காலத்தில் கல்வி கிடைப்பது என்பது மிக கடினமான ஒன்று. மன்னர் ஆட்சி நடந்த காலத்தில் கடந்தஇரண்டு நூற்றாண்டிற்கு முன் எழுத்தறிவு பெற்றவர்கள் மிக அரிதாகவே காணப்பட்டனர்.
குலதொழில் அதிகம் காணப்பட்ட காலம். தொழில் கற்க கூட குருவை தேடி செல்ல வேண்டிய காலம் ஐந்து பேர்களுக்கு மேல் குரு மாணவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டார்.
முதல் ஒரு வருடம் குருவிற்கு தனிப்பட்ட சேவை செய்ய வேண்டும். பிறகுதான் பாடங்களையே ஆரம்பிப்பார். அந்த மாணவரிடம் கல்வி மீதுள்ள நாட்டம் மேலோங்கி நிற்கும் எப்போது குரு நமக்கு கல்வி கற்பிப்பார் என்ற ஆவல் மேலோங்கி நிற்கும்.
மன்னராட்சி நிகழ்ந்த காலமதில் எழுபது சதவிகிதம் விவசாயி
மீதம் உள்ளவர்கள் சிப்பாயி..மிக சொற்ப மாணவர்கள் கலை வல்லுநர்
கல்வியாளர் என்றிருப்பர்..கல்வி கற்க சிறு வயதில் குரு குலம்
சென்று குரு ..பொறுமைக்கு வைக்கும் பரிச்சையில் ..துண்டை காணோம்
துணியை காணோமே என ஓடியவர்கள் மிக அதிகம். அதை எல்லாம்
சகித்து ..காலத்தை வென்று பெரும் கல்வியாலராய் வளம் வருபவர்கள்
மிகச்சிலரே ..கற்றவர் என்றால் அவ்வளவு மரியாதை ..சிறப்பும்
நிறைந்த தருணமாய் அமைந்து இருந்தது.
இன்றைய காலத்தில், உனது காலடியில் கல்வி ! நீ வீட்டு வாசலை விட்டு வெளியே வந்தால் வாகனம் காத்திருக்கிறது. பள்ளிக்கு சென்றால் அங்கு உனக்கு இலகுவாகவே கல்வி கிடைக்கிறது. நீ குருவிற்கு சேவை செய்துதான் கல்வி பெற வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. ஆனால் நீ உன் வாழ்வில் மிளிர வேண்டும் என்றால் உன் மீது குருவின் பார்வை பட வேண்டும்.
தமிழில் ஒரு பலமொழி உண்டு.
"குருவின் பார்வை பட்டால் கோடி பலன்"
ஆனால் எத்தனை மாணவர்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கிறது. ஒரு வகுப்பறையில் ஐம்பது மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் பத்து அல்லது இருபது மாணவர்களே மிளிருவர். மற்றவர்கள் குருவின் பார்வையிலேயே படுவதில்லை. இவர்களை போல நீ இருந்து விடாதே ..!நீ பயிலும் வகுப்பில் ஐந்து ஆசிரியர் தினமும் வந்து செல்வர் ..குறைந்த பட்சம் ஒரு ஆசானின்
பார்வை உன் மீது பட்டால் அவரின் வழிகாட்டல் உன் கல்வி பயணத்திற்கு உதவியாக இருக்கும்.
இன்றைய கால கட்டத்தில் குருவிற்கு செய்யும் சேவை அவருடைய பணியை இலகுவாக்குவதுதான்.
* ஆசிரியர் தரும் வீட்டு பாடத்தை சரிவர செய்வது
* வகுப்பறையில் அமைதி காப்பது
* பாடத்தை நன்கு கைவத்து ஆசிரியர் கேட்கும் பாடம் பற்றிய கேள்விக்கு பதில் அளிப்பது மூலம் குருவின் பார்வை உன் மீது படும் நீ கோடி பலன் பெறுவாய்.
கேள் மகவே கேள் ! அடுத்த வாரம் சமுதாயத்திற்கு செய்யும் சேவை பற்றி காண்போம்...

அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
குருவினது பார்வையில் கொஞ்சமே பட்டால்
ReplyDeleteஅருள்பெறுதல் ஈடில்லா ஆனந்தம் - பொருள்தந்தாய்
முத்தான தத்துவமாய் முக்திதரும் சொத்துதந்தாய்
சத்தான வார்த்தை சமத்து.
ஆம் ...
Deleteசரியாக சொன்னீர்கள் ..
ஒவ்வொரு வகுப்பறையிலும் ..முதல் வரிசை
மாணவர்கள் ..நாடு பகுதி மாணவர்கள்
கடைசி வரிசை மாணவர்கள் என இருப்பர்
ஆசிரியரின் மனதில் முதல் வரிசை பெரும்
மாணவன் நிச்சயம் வெற்றி பெறுவான்
குருவின் பார்வை விளக்க உரையும் உணர்த்திய விதமும் அருமை.
ReplyDeleteதொடருங்கள். வாழ்த்துக்கள்.
குருவின் ..பார்வை
Deleteகோடி பலன் தரும் என்பதை தங்களை போன்ற
நல்ல பதிவர் போற்றுவது மனதிற்கு மகிழ்வாய் உள்ளது
சிந்திக்க தூண்டும் படைப்பு !
ReplyDeleteகுரு விளக்கம் அருமை
ஆசிரியரின் மனதில் இடம் பிடிக்க ..
Deleteநல்ல கல்வியாளனாக வளம் வர மாணவர்கள்
முயசிக்க வேண்டும்
தம் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே ...
Deleteநீண்ட இடைவெளிக்கு பின் பின்னூட்டத்தில்
தங்களின் பதிவை காண்கிறேன் ...
தங்கள் மகள் திருமண விழா ..நிமித்தம் பிசியாக
இருந்ததையும் அறிவேன் ..
இப்பின்னூட்டத்தின் மூலம் ...
தங்கள் மகள் திருமண வாழ்த்தை பதிகிறேன் ...
மணமக்கள் ..
இருமனமும் ஒருமனமாய்
இணைந்து ..கருத்தொற்றுமை கண்டு
நீண்ட நெடுங்காலம் ..
எல்லா வளமும் பெற்று
மகிழ்வாய் வாழ வாழ்த்துகிறேன் .