.

Pages

Monday, September 22, 2014

[ 12 ] மகவே கேள் : சுயநலம் !

சுயநலம் என்ற சூழலில் சிக்கி கொள்ளாதே. நாகரீகம் அடைந்த வாழ்க்கையில் சுயநலமான செயல் அருவருக்கத்தக்க செயலாக கருதப்பட்டாலும் தனி மனித வாழ்வில் அவ்வப்போது எட்டி பார்க்கத்தான் செய்கிறது.

சில வரிகளில் ஒரு புது கவிதை...

அன்று திருவிழா
அப்பா வாங்கி வந்தார்
அதிக மான பண்டங்கள்
அவ்வளவும் எனக்கே என்றான்
ஐந்து வயது பாலகன்
அம்மா சிரித்தாள்

அப்பாவின் இறந்த நாள்
ஐம்பது வயது மகன்
அத்தனை சொத்துக்களும் எனக்கே என்றான்
அம்மா அழுதாள்

ஆம், நன்கு புரிந்து கொள் உனது உழைப்பால் பிறர் நலம் பெற நினைத்தால் உன் வாழ்வு சிறக்கும். அதே சமயம் உன் வாழ்வு சிறக்க பிறர் நலம் பாராமல் உனக்கு மட்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் அது உன்னை பிறரிடம் இருந்து பிரித்து காட்டும். அது மட்டுமன்றி, உனக்கு உள்ள உறவின் வட்டம் மிக சுருங்கிவிடும்.

தன்னலம் பாராமல் செயல் படு ! உன் நலம் தானாக தேடி வரும் !!
வணிகம், ஒரு சேவை அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அரசியல், ஒரு சேவை அடிப்படையிலே  அமைந்துள்ளது. சுயநலம் என்ற வட்டம் உன் கழுத்தை இறுக்கி விடும். கவனம்...

நன்றி ! மீண்டும் வேறு ஒரு தலைப்போடு சந்திக்கிறேன்...

முற்றும்
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

6 comments:

  1. Replies
    1. கவிதையையும் ...கருத்தையும் ...நன்குனர்ந்தமைக்கு
      நன்றி

      Delete
  2. சுயநலம் பற்றிய புதுக் கவிதையை சுருங்கச் சொன்னாலும் சூப்பராகச் சொல்லியிருக்கிறீர்கள். அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆம்... சுய நலம் ..கொடிய மன நோய் ...,
      உறவை வதைக்கும் நோய் ..கருத்திட்டமைக்கு நன்றி

      Delete
  3. தனக்கு என்ற சுயநலம் அம்மனிதனை தனிமைப்படுத்திவிடும். அது ஒருவகை துன்பம். இதற்கான உதாரணங்களை நம் வாழ்க்கையில் காணலாம்.

    ஆனால், எல்லோரையும் அரவணைக்கும் குணமான அந்த சுயநலம் பொதுநலம் என்ற பெயர் பெரும் அப்பொழுது தனிமை மறைந்து சகலருடன் மனம் இன்பத்தில் இருக்கும். இவ்வாழ்வே உயர்வு என்ற கருத்தினை அழகாக கவிதை வரிதனில் வடித்து அறிவுரை தந்த தங்களை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையின் கருத்தை நன்குணர்ந்து பின்னூட்டமிட்ட
      அறிஞர் நபி தாச அவர்களுக்கு நன்றி .
      தங்களுக்கும் ...எனக்கும் ..ஒத்த கருத்து அதிகம் என் நம்புகிறேன்

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers