.

Pages

Wednesday, October 22, 2014

தீபாவளி !

அசூரனை(தீயவனை) அழிப்பதுவே தீயக்குனத்தை ஒழிப்பதாகும் :
தீபாவளித் திருநாள்
தெருவெங்கும் அமர்க்களம்
சோபாக்களில் அமர்ந்து
சொந்தங்கள் குதூகலம்

அசூரனை வென்றதனால்
அசராமல் வெடிச்சத்தம்
அசூர மத்தாப்புக்கள்
ஆங்காங்கே புஸ்சத்தம்

அமைதியைக் குலைத்திடும்
அத்தனையும் தீமைகளே
இமையும் கண்ணாகி
எதிர்த்திடுவோம் தீயவனை

காயங்கள் வடுவாக்கும்
காலத்தே தடுத்திடுவோம்
தீயவனை அழிப்பதுவே
தீமைகளை ஒழிப்பதாகும்

பற்றிடுவோம் நல்மனதில்
பாசமுடன் உள்ளன்பை
ஒற்றுமைக்கே திருநாள்கள்
ஒவ்வொன்றும் பெருநாள்கள்

தித்திக்கும் பலகாரம்
தீபாவளித் தினத்தினிலே
அத்தனையும் அளித்திடுவார்
அஹமதியர் வீட்டினிலே

பக்ரீத் பெருநாளில்
பாஸ்மதிப் பிரியாணி
சிக்கன் வறுவலுடன்
சேர்பாரே சகமதத்தார்க்கே

அண்ணன்தம்பி உறவுபோல்
அமைதியான ஒற்றுமையில்நாம்
சின்னச்சின்னத் துவேசத்தால்
சிதைப்பதைத்தவிர்த்திடுவோம்

வெடித்திடுவோம் தீயஉணர்வை
விரட்டிடுவோம் துவேசத்தை
நடித்திடும் நயவஞ்சகத்தை
நல்லதாக மாற்றிடுவோம்.

தீபாவளி நரகாசூரனை
திருநாளில் அழிப்பதுப்போல்
தீதானத் தீக்குணத்தை
திரேகத்தில் அழித்திடுவோம்.

நபிதாஸ்

4 comments:

  1. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளிக்குப் பின் திண்டுக்கல் திரு தனபாலன் அவர்கள் வருகை மகிழ்வைத் தருகிறது.

      தீப ஒளிதனில் தாங்கள் மகிழ்ந்திருக்க வாழ்த்துக்கள்.

      Delete
  2. // தீதானத் தீக்குணத்தை
    திரேகத்தில் அழித்திடுவோம்.// வரிகள் அருமை

    ReplyDelete
    Replies
    1. மீதான நற்குணத்தை
      மென்மையாய் வளர்த்திடுவோம்

      என்பதும் அதனுள் ஒளிந்துதான் உள்ளது. வரிகளை இரசித்தமைக்கு நன்றி.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers