.

Pages

Friday, February 20, 2015

இயற்கையின் செயல்களே !

இயற்கைச் சிரிக்கிறது - ஆனால் !
குழந்தைச் சிரிக்கிறதென்பார்.

இயற்கைப் பொழிகிறது - ஆனால் !
மழைப் பொழிகிறதென்பார்

இயற்கைப் பிரகாசிக்கிறது - ஆனால் !
சூரியன் பிரகாசிக்கிறதென்பார்

இயற்கைச் சுழல்கிறது - ஆனால் !
பால்வெளிச் சுழல்கிறதென்பார்

இயற்கை நடக்கிறது - ஆனால் !
மனிதன் நடக்கின்றானென்பார்.

இயற்கையின் செயல்கள் - ஆனால் !
இயங்கியவைகள் தனதென்றால் !

இதுதானே அநியாயம் ! - ஆனால் !
இயற்கைத் தனைப் பிரிக்கவில்லை

இவைமூலம் அதன் இயக்கங்கள் - ஆம் !
அவ்வெண்ணங்களும் அதனுடையதே
இப்போக்கில் தெளிந்திடுவோர் - என்றும்
இணை நீக்கி வாழ்ந்திடுவாரே.

நபிதாஸ்

4 comments:

  1. இயற்க்கை என்றும் அழகே ..!
    செயற்கை என்றும் அருவருப்பே ..!
    கவியாலே ...சொன்னீர்கள் உண்மையை ...
    வாழ்த்துக்கள் ..கவிஞர் ..நபி தாஸ் ..அவர்களே

    ReplyDelete
    Replies
    1. உண்மை என்றும் அழகு. பொய்மை என்றும் அருவெருப்பு என்ற பின்னோட்டம் கவிச்சொற்களை உள்ளடக்கிய உயர்வானது.

      Delete
  2. தாங்கள் கூறும் அனைத்தும் இயற்கையானதே ! ஆனால் அதன் தன்மைகளையும், குணாதிசயங்களையும் பொறுத்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பேரிட்டு அழைக்கப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் எழுதியப் பின்னோட்டம் படிக்க மனம் குளிர்ந்தது.
      இடையில் பெயரிட்டு அழைப்பதால் அவைகள் தனித்துவம் ஆனது என்றக் கோட்பாடு நிலைத்துவிட்டது. உண்மை உணர்வதே உயர்வு.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers