.

Pages

Wednesday, July 15, 2015

அவன் பேசினால் !

உன்னி லுருவாகி யுள்ளதான
.....வுந்தனகங்காரம் மெல்லவே
என்னில் கரைந்திடவே தந்தேனே
.....என்னை வணங்கிடும் தத்துவமே.
நின்னில் வழக்காக நித்தமுமே
.....நிந்தன் நினைவினை பத்தாகத்
தன்னில் வளர்த்தே வருகிறாய்த்
.....தம்மைக் கெடுத்தே வருந்துகிறாய்.

உடம்பு வணக்கத்தில் தோற்றமாக
.....வுள்ளம் பலவெண்ண மாற்றம்
தடத்தில் விலகி வழக்காகத்
.....தன்னில் நடத்தும் பழக்கம்.
அடக்கும் வழியறிந்து வொன்றாகி
.....யமைதி தரித்து நன்றே
நடத்தும் முறையில் வணங்க
.....நபியின் நிலையி லிணங்கு.

அசைவு வனைத்துமடங்கி
.....யமைதி நிலவ முடங்கி
திசையி லொடுங்கியே யென்னைத்
.....தெரிந்து யிழந்திடு வுன்னை.
இசைந்தே உரையாடல் நானு
.....மிரசூலுமத்தஹி(யா)தில் பேணும்
விசையை யறிந்தே வணங்கும்
.....விதமே விரும்ப மெனக்கு.

உந்தன் வணக்கம் பலனும்
.....உனக்கே வுதவும் விளங்கிடு
எந்தன் வழியைநீ பற்றிட
.....யேற்கும் பணிவையே பெற்றாய்முன்.
தந்தேன் வணக்கத்தி லென்னை
.....தகுதி உயர்த்திடு வுன்னைபின்.
பந்தம் தெளிந்திட வுந்துதலில்
.....பட்டிட்டால் பக்குவமே வுந்தனிலே.

நபிதாஸ்

1 comments:

  1. நபிதாஸ் அவர்களின் கவிதை அருமை
    ----------------------
    அஸ்ஸலாமு அழைக்கும் தள நிறுவனருக்கு நீடூர் சீசன் முகம்மது அலி எழுதிக் கொண்டது. சமீப காலமாக அதிரை மெய்சா பதிவுகள் எதுவும் போடுவதில்லையே .ஏன் .? அவருடைய கட்டுரைகள் கவிதைகள் எல்லாம் இதிலிருந்து எடுக்கப்பட்டு விட்டதே ஏன் . தெரிந்து கொள்ளலாமா.? அவருடைய பதிவுகள் மக்களுக்கு பயன்தரக் கூடியதாக இருப்பதால் இதற்க்கு முன்பு இந்த தளத்திலிருந்து தான் எடுத்து எனது தளத்தில் போடுவேன். அதனால் தான் கேட்கிறேன்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers